மீசைப் பாரதி முண்டாசு கவிஞர்
திசை எட்டும் கொட்டிய முரசு இசைப் பாட்டு முழங்கி
சுதந்திர தாகத்தை எழுப்பிய பாரதி.

தேசம் போற்றும் மகாகவி பாரதி
பெண் விடுதலை வேண்டி எழுதி
நேசம் கொண்ட பாரதி
விண் முட்ட எழுப்பினார் குரல்.

சாதி சமுதாயம் வெறுத்த பாரதி போதி மரத்து புத்தர் போல மாற்றப் போட்டார் பூணூல் ஏற்றம் கண்டார் மக்கள் மனதில்.

கும்மிப் பாட்டு பாப்பா பாட்டு விம்மி எழும் அஞ்சா பாட்டு தமிழர் நிமிர்ந்த பாட்டு
எத்தர் கூட்டம் பயந்த பாட்டு.

இயற்கை ரசிக்கும் ரசிகன் பாரதி
இறை நேசம் கொண்ட பாரதி விடுதலை வேள்வி பாரதி
வீறு நடை போட்ட பாரதி.

வறுமைக் கோட்டில் வாடிய பாரதி
எட்டய புரத்து கவிஞன் பாரதி அஞ்சா நெஞ்சன் பாரதி மரணம் இல்லா மகாகவி பாரதி.

Share.

Leave A Reply