ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒழுங்குடன் செல்லும் எறும்பு இணைந்து
ஒன்றுபட்டு வானில் பறக்கும் பறவை
தலைமை ஏற்று இணைந்து வாழும்
ஒன்றிணைந்து விலங்குக் கூட்டம் வாழும்
பிரிந்து செல்லாமல் பாதுகாத்து வெல்லும்
ஒன்று பட்டே தேன்கூடு கட்டும்
தேனிவாழும் முறை சொல்லும் இணைந்து.


அடிமை ஆட்சி உடைத்து எரிந்து
சுதந்திரம் பெற்றது இணைந்து துணிந்ததால் மடியும் கொடியபுற்று காச அம்மை பிளாக்குக்கு
மருந்து கண்டுபிடித்தது இணைந்து துணிந்ததால் கொடிய சுனாமி மழை வெள்ளத்தில்
இணைந்து துணிந்து வெற்றி கொண்டோம்
மடிந்த ராணுவ வீரருக்கு அஞ்சலிசெய்து
இணைந்து துணிந்து நாட்டை காப்போம்.

இடர்கள் எத்தனை வந்த போதும்
துணிந்து துயர் துடைத்து வாழ்வோம்
தேடல் என்பது எப்போதும் இருந்தால்
வாடல் என்பது ஓடி ஒழியும் நாடல் மாற்று வழி ஆனால்
கோடி நன்மை தேடி வரும் கூடல் நகரத்து கூத்தாடி இறைவன்
இடர்களைத் தவிர்ப்பான் இணைந்து துணிவோம்.

Share.

Leave A Reply