சிவந்த மண் சிறுகூடல் பட்டியில்
பிறந்த இலக்கிய ஞானி கண்ணதாசன்
நவரச கவிதை தந்த கவிச்சிற்பி
எக்காலத் தவரும் விரும்பும் கவி
குவடு மேல் இருக்கும் கண்ணனை
உணர்ந்து நாத்திகம் இறந்த மேனியென்று
நவநீத கண்ணன் புகழ் பாடி
கண்ணனுக்கு தாசனாய் கவிதை தந்தவர்.
“எண்ணங்கள் ஆயிரம்” “ஞான மாலிகா”
” எனது சுய சரிதம்” பதிவு மண்ணுள்ள மட்டும் மறக்க முடியாது
அர்த்தமுள்ள இந்து மதம் பத்தும்
விண்ணளவு பரவி பாராட்டப் பட்டவை
சித்தரை படித்தாய் சித்தாந்தம் பேசி
கண்ணனை எண்ணியே காலத்தை கடந்தாய்
காலம் கடந்தும் எண்ணத்தில் நிற்கின்றாய்.
கம்பனை புகழ்ந்தார் பாடல் ஆக்கினார்
கம்பன் கழகம் தாரணி புகழ்வதாக
நம்பிக்கை கொண்டே இதழ்களில் எழுதினார்
நாத்திகம் பேசினார் நர்த்தனம் ஆடினர்
விம்மிதம் நடந்தது ஆத்திகம் எழுதியே
ஆனந்தம் கொண்டார் கண்ணணுக்கு தாசன் சிம்மாசனம் போட்டு மக்கள் மனதில்
இலக்கிய ஞானியின் பாடலும் ஒலிக்கிறது.