இந்திய எல்லை இறைவனின் எல்லை
இறைவனின் பூமியெங்கும் இந்தியர் எல்லை
இமயம் குமரிமட்டும் எல்லைக ளில்லைஇந்த
இன்பவையம் முழுவதும் எங்களின் எல்லை.

சக்தியின் பூமிநிற்கக் கண்டது உலகம்
சக்தியைத் தெய்வமென்று கண்டது பாரதம்
பக்தியை நோக்கிஇன்று நடந்தது உலகம்
பக்தியின் ஆதிஅந்தம் பார்த்தது பாரதம்.

சித்திரக் கூடமும் சிற்பகோ புரங்களும்
தத்துவத் தெய்வமும் தனிப்பெரும் மதங்களும் பேதமும் சீதமும் வித்தையும் வீரமும்
நாகமும் நடனமும் நாட்டிய கலைகளும்.

பாரதம் அன்னவள் பண்பினால் வாழியே
பாரத மாந்தரின் படைக்கலன் வாழியே
வாழிய என்னுமோர் வார்த்தையும் தமிழினில் வலியுறும் அன்னவன் வாழுவாள் வாழியே.

போகங்கள் முடியும் தத்துவம் பிறக்கும்
தாகங்கள் தீரும் மனதாவல்கள் ஒடுங்கும்
சுற்றம் துறத்தால் அதுவே யோகம்
கற்றுத் தெளிந்த ஞானமே யோகம்

ஐம்புலன்கள் பஞ்ச பாண்டவர் போன்றது
ஐம்புலன் அடக்க வாழ்வே ஒழுக்கம்
தெய்வம் உண்டென்றிரு சஞ்சீவி மூலிகை
தாய் போல் காப்பதே யோகம்.

Share.

Leave A Reply