என்று தனியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்ற பாரதியார் பாடல் உமது சுவாசம்
சுவாசம் நீற்கும் போதும் துணைவியார் பாட
வென்று விட்ட சுதந்திர சுவாசத்தை இறுதி
மூச்சில் சுவாசித்து விண் உலகு சென்றவர்
என்றும் பாரதியார் பாடல் உன் இதய
சுவாச மாகி பாடிக் கேட்ட ரசிகன்.
தூய தமிழ் கொள்கை கொண்டு எழுந்து
துயர் கண்டு அச்சம் இல்லாத சிங்கம்
வையகம் தாயகம் வானளவு உயர்ந்து நின்றவர்
மகன் இறந்த போது பம்பாயில் இருந்து
துயர துக்கம் இன்னல் தந்த போதும்
கப்பல் வாங்கி இந்திய தேசம் காத்தவர்
வயது குறைந்த மகன் இறுதி
சடங்கு செய்ய முடியாத தந்தை இந்தியமகன்.
இரண்டு அடி திருக்குறள் நெறி கொண்டு
இன்பம் கொண்டு வாழ்ந்த நல் மனிதர்
பேரன் இன்று பெயர் சொல்லும் பிள்ளை
உமது வழியில் தூய தமிழ் நேசம்
சேர நாட்டு மண்ணில் செக்கிழுத்த செம்மல்
சோர்ந்து போக வில்லை உணவின் தொல்லை
வீர மரணம் ஏற்றுக் கொண்ட செம்மல்
விடிந்தது இன்று சுவாசம் சுதந்திர காற்றில்.