உலகை மாற்றும் வல்லமை உன் கையில்
பொக்கிசமாய் இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறது
அற்புதமான அதை அலைக்கழித்து விடாதே
சிற்பமாய் மாற்றும் நுட்பம் அறிந்து கொள்
கடந்து வந்தவைகளை எண்ணிப்பார்
அன்பினால் புயலை எதிர்கொண்டோம்
பொறுமையால் பண மாற்றத்தை ஏற்றுக் கொண்டோம்
ஒற்றுமையால் ஜல்லிக்கட்டை வென்றெடுத்தோம்

இன்ப துன்பம் எத்தனை நிகழ்ந்தாலும்
வரலாறை மிஞ்சுவதெல்லாம்
அன்பும் ,பொறுமையும், ஒற்றுமையும்தான்
முழுமையாய் இன்னும் ஒரு வருடம்
அழகாய் பூத்திருக்கிறது உன் கையில்
அன்பு காட்ட , ஒற்றுமை விதைக்க
பொறுமை கொள்ள வெற்றிபெற
காலம் என்னும் தீ எரிந்து கொண்டே இருக்கிறது

அதில் வெறும் கனவுகள் \ஆவியாகிவிடும்
உன் இலட்சியங்கள் வெற்றிகளாய் மாற
வருத்தி எடுத்தாலும் முயற்சியால்
உன்னை தயார் படுத்திக் கொள்
வெற்றி கனிந்து வரும்
அமிர்தமாய் உன் கையில் நிறையும்
மகிழ்ச்சியோடு முயற்சி செய்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Share.

Leave A Reply