பல நோய்களை குணப்படுத்தக்கூடிய மகத்துவம் நிறைந்த கற்றாழை தாவரத்தை நமது வீட்டில் வளர்க்க வேண்டும்.
கற்றாழை சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகையான கற்றாழைகள் உள்ளன.
கற்றாழை பயன்படுத்தும் பொழுது எப்பொழுதும் முதிர்ந்த கற்றாழைகளை பயன்படுத்த வேண்டும். முதிர்ந்த கற்றாழையில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதோடு கசப்புத் தன்மையும் அதிகம் இருக்காது.
கற்றாழையை தினமும் காலையில் நாம் எடுத்து கொண்டுவரும்பொழுது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் தேவையில்லாத வாய்வுகளை வெளியேற்றப்படுகிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து நமது உடலில் எடையை குறைக்க அதிகம் உதவுகிறது.
மலச்சிக்கல் மாதவிடாய் பிரச்சனைகள் உடலில் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் கற்றாழையை தினந்தோறும் காலையில் எடுத்துக் கொள்ளவேண்டும் கண்பார்வை அதிகரித்து கண் பார்வையை கூர்மையாக்கும் தெளிவாக தெரிய வைக்கிறது.சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.

கொழுப்புக்கள் உடலில் அதிகம் தங்குவதால் இதய கோளாறு மாரடைப்பு ஆகிய பிரச்சனைகள் உருவாகிறது. இந்த கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் கரைக்கும் தன்மை இந்த கற்றாழைக்கு உண்டு. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைக்கும் இது மிகவும் உதவுகிறது. எனவே தினமும் இதை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிகவும் குளிர்ச்சி என எண்ணுபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொள்வது நல்லது. கற்றாழையை வெட்டி எடுக்கும் பொழுது அதில் மஞ்சள் நிற திரவம் ஒன்று வெளிவரும். அதன் பெயர் மூசா மரம் இதற்கு கரியபவளம் , காசுக்கட்டி என வேறு பெயர்களும் உண்டு.
அதை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது அதை வெட்டி ஒரு இருபது நிமிடம் வைத்து விட்டால் அது அனைத்தும் வெளியேறிவிடும். அதன் பிறகு அதன் மேல் உள்ள பச்சை தோலை நீக்கிவிட்டு வெள்ளையாக உள்ள ஜெல்லி போன்ற கற்றாழைச் சோறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வெயில் காலத்தில் இந்த கற்றாழையை மோருடன் கலந்து பருகி வரும் பொழுது தோல் பிரச்சினைகள் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சூடு, வயிற்று கோளாறு, முகப்பரு போன்றவை எதுவும் வராது. அதிகப்படியான பல நன்மைகளைத் தரும் இந்த கற்றாழையை நாம் வெயில் காலத்தில் எடுத்துக் கொண்டு பயன்பெறவேண்டும்.