அடித்துக் கொண்டே இருக்கிற
அலையும் ஆசைகளும்

இடித்துக் கொண்டே இருக்கிற
இடியும் இறைச்சலும்

பூத்துக் கொண்டே இருக்கிற
பூவும் மகிழ்ச்சிகளும்

உயர்ந்து கொண்டே இருக்கிற
சிகரமும் இலட்சியங்களும்

உதிர்த்து கொண்டே இருக்கிற
சருகுகளும் சங்கடங்களும்

ஊறிக் கொண்டே இருக்கிற
ஊற்றும் தாகமும்

கரைந்து கொண்டே இருக்கிற
வளமும் காலமும்

இனிவரும் சந்ததியருக்கும்
மிச்சம்வைக்க

நம்மை நாமே நெறிப்படுத்துவோம்
சரியாய் அனைத்தையும் பயன்படுத்துவோம்.

Share.

Leave A Reply