
ஸ்ரீ ஐசுவரியம் இதழ் தொடங்கி இப்போது ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீ ஐசுவரியம் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சோதனைகளைத் தாண்டி அனைவர் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்த ஒரு இதழாக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது என்பதில்எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
தொடக்கத்தில் இருந்து எங்கள் இதழைப் படித்து மகிழ்ந்து எங்களுக்கு ஊக்கம் தந்து கொண்டிருப்பவர்களுக்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம்.எங்கள் இதயம் கனிந்த நன்றியினை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஓராண்டாக ஐசுவரியம் இதழ் தொடர்ந்து இணையதளத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இணைய தள இதழை உலகம் முழுவதும் உள்ள கோடான கோடி வாசகர்கள் -குறிப்பாக தமிழ் இதயங்கள் படித்து இன்புற்று வருகின்றனர்..
தொடக்கத்தில் ஒரு சிறிய வட்டத்தில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஐசுவரியம் இதழின் செயல்பாடுகள் இப்போது உலகம் முழுவதும் உள்ள வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது.
நல்ல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் உள்ளவர்களுக்கு ஸ்ரீ ஐசுவரியம் இதழில் தேவையான செய்திகள் அளப்பரிய அளவில் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறோம் .
கடல் கடந்து பல தேசங்களில் வாழ்ந்து மகிழ்ந்து கொண்டு இருக்கும் நம் சொந்தங்கள் இந்த இதழின் நல்ல விசயங்களைப் படித்துணர்ந்து தனது ஆன்ம உணர்வுகளுக்கு அமைதி தந்து கொண்டிருக்கிறார்கள் .
நல்ல விசயங்களுக்காக ஸ்ரீ ஐசுவரியம் இணைய தளத்தில் எங்கள் இதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
வரும் ஆண்டில் இன்னும் பல புதிய பொலிவுகளுடனும், புதிய மாற்றங்கள், தோற்றங்களுடன் அனைவரையும் மனம் மகிழ்விக்கும் வகையில் இதழை வெளியிட முயற்சிகள் செய்து, அதில் வெற்றி பாதையில் பயணிக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரிய மரங்களில் ஒன்று அரசமரம் , அதில் உயிர் வாழ்வதற்கான சுவாச உயிர் காற்று அதிகம் உள்ளது. இந்த விருட்சத்தின் விதையானது மிகச்சிறியது . ஆனால் அதுவே விருட்சமாகும் போது உயிர்களின் உயிர்நாடியாக உள்ளதை சிந்திக்க வேண்டும். .
எதையும் எதிர்பாராத கடமை உணர்வுடன் வெளிவரும் ஸ்ரீ ஐசுவரியம் பலருக்கும் வழிகாட்டியாக இருந்தால் அதுவே எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும்.
”விதைப்பது உண்மை பெறுவது நன்மை ”என்ற தாரக மந்திரத்துடன் எங்கள் செயல்பாடுகள் தொடரும் . அனைவரும் இணைய தளத்தில் ஸ்ரீ ஐசுவரியத்தைப் படித்து பயன் பெற்று நலம் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் .–ஆசிரியர் .