அழகுக் குறிப்பு
அரிசி நீரின் பயன்கள்
கிண்ணத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் அரிசி கழுவிய நீரை எடுத்துக்கொள்ளுங்கள் . பின் அதனை நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு உலர வைக்க வேண்டும்.
பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இதனால் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களை உண்டாக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு முகம் பொலிவோடு காணப்படும்.எளிய பயிற்சி செய்து பார்க்கவும்
– பிரேமா பாலகிருஷ்ணன்
பழமொழி
“ஆறு கெட நாணல் விடு,
ஊரு கெட நூலை விடு”
நாம் அறிந்த விளக்கம் :-
நேரடியாய் பழமொழியை பொருள் கொள்ள பார்த்தோமானால் ஆற்றை பழகுவதற்கு நாணல் விட்டும். ஊரை கெட்டுப்போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும் ஆனால் இந்த விளக்கம் உண்மை அல்ல.
உண்மையான விளக்கம் :-
நூல் விட்ட ஊரும் நாணலாற்ற ஆற்றங்கரையிம் பழுதாகி போகும். என்பதை அர்த்தம் கொள்ளவேண்டும். அதாவது படிப்பறிவில்லாத படிப்பதற்கு ஆர்வம் காட்டாத ஊர் எந்தவித முன்னேற்றமும் அடையாது. நாணல் போன்ற தாவர வகைகள் அதிக அடர்ந்திருக்கும் கரைப்பகுதி பலமுள்ளதாக இருக்கும். சீக்கிரம் ஆற்றினால் அரிக்கப்பட்டு கரைகள் பாதிக்கப்படாது. என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி முன்னுக்குப்பின் மாறி மருவி இவ்விதம் வந்துவிட்டது.
.