திருமூலர் எழுதிய திருமந்திரம் என்றார் நூல் ,தமிழர்களின் பழங்கால நூல்களில் ஒன்று. தமிழர்களின் வாழ்க்கைக்கு நல் வழிப்படுத்தும் விசயங்கள் அனைத்தையும் மந்திரங்களாக வடிவைமைத்து உள்ளார். இந்த திருமந்திர கருத்துக்களை ஸ்ரீ ஐசுவரியம் இணையதள வாசகர்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவர் எழுதிய பாடல்களையும் அதில் உள்ள கருத்துக்களையும் எளிய முறையில் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. புதிதாக இப்பகுதி வருகிறது படித்து பயன் பெறுங்கள்- கவிஞர் ச. மல்லிகா .
பாடல் -2
காலனை வென்ற கால காலன்
போற்றிஇசைத்துஇன்னுயிர்மண்ணும்புனிதனை
நாற்றிசைக்கும்நல்லமாதுக்குநாதனை
மேற்றிசைக்குள்தென் திசைக்கொருவேந்தனையும்
கூற்று உதைத் தானையான்கூறுகின் றேனே.
பொருள்
வாழ்த்தி வணங்கி வழிபட்டு , உலகத்து உயிர்கள் எல்லாம் கொண்டாடும் பெருமைக்குரியவன் பரம்பொருள் . அவன் திசை நான்கிற்கும் , ஆதி சக்தி நாயகிக்கும் தலைவன். அவனே கிழக்கு, மேற்கு, தெற்கு , வடக்கு , தென்கிழக்கு, தென்மேற்கு , வடமேற்கு, வடகிழக்கு, மேல் கீழ் என விரிந்த திசைகளுக்கெல்லாம் தலைவன். குறிப்பாக தென் திசைக்கு அரசன் அவன்.காலனைக் காலால் உதைத்தவன் அவன். அவனே நான் குறிக்கும் இறைவன் ஆவான் என்கிறார் திருமூலர் .