Author: admin

9-ஏமாற்றுபவன் ஏமாறுவான் உம்…உம்… என கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள் ரமா. அங்கு வந்து அப்பளக் குடுமி தாத்தா. ஏன்? ரமா அழுது கொண்டு இருக்கிறாய் என அன்புடன் கேட்டார். ம்…ம்..என தேம்பிக் கொண்டே “தாத்தா… தாத்தா என்னுடைய பேனாவை எடுத்துக் கொண்டு அவளுடையது என்று சொல்கிறாள் இந்த உமா” என அழகைவுடன் தட்டுத் தடுமாறி கூறி முடித்தாள் ரமா.உமா…உமா… என கூப்பிட்டார் தாத்தா. என்ன! தாத்தா என அருகில் வந்தாள் உமா. ரமாவுடைய பேனாவை உன்னுடையது என்கிறாயா! என கேட்டார் தாத்தா.இல்லை தாத்தா! அது வந்து… என்னுடையது என வார்த்தைகள் தடுமாற கூறினாள் உமா. அப்போது அங்கு ஓடி வந்த லலிதா, உமா நீ உட்கார்ந்த இடத்தில் கிடந்தது. என பேனாவை நீட்டினாள் லலிதா. உமா வாங்க கையை நீட்டினாள், தாத்தா இந்தப் பேனா தான் என்று ரமா கத்தினாள். உமா கண்கலங்க தாத்தாவைப் பார்த்தாள். பொய்யும்,…

Read More

இருளும் பேயும் அப்பளக்குடுமி தாத்தா கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி சிறுவர்கள். ஒரு சிறுமி மிட்டாய் வைத்திருந்தாள் அதை பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு சிறுமி பறித்து வாயில் போட்டுக் கொண்டாள். மூதேவி.. மூதேவி போடி உங்க வீட்டிற்கு ‘பேய்’ வர ‘பூதம்’ வர என திட்டிக் கொண்டு இருந்தாள் மிட்டாய் பறிகொடுத்த சிறுமி. சண்டை போட்ட குழந்தைகளைப் பார்த்து, இங்கே வாருங்கள் என தாத்தா அழைத்தார். இருவரும் ‘உம்’ என முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். உங்களுக்கு பேய் கதை சொல்லட்டுமா? என தாத்தா கேட்டது தான் தாமதம்… தாத்தா சொல்லுங்க… தாத்தா சொல்லுங்க என எல்லோரும் கத்த ஆரம்பித்து விட்டார்கள். அமைதி… அமைதி என்றவர் கதை சொல்ல ஆரம்பித்தார். ஒரு கிராமத்தில் கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வீட்டில் எப்போதும் வறுமை தாண்டவம் ஆடியது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே, இருவரும் காலையில் வயல் வேலைக்குப் போனால்…

Read More

61-தெய்வ மிகழேல் வகுப்பறையில் குழுவாகப் படித்துக் கொண்டு இருக்கும் போது புவனா, புத்தகத்தை திலகா வாங்கினாள் படிக்க. அதில் சாமி படம் இருந்தது ஒரு பக்கத்தில். அதை எடுத்த திலகா, இந்த சாமி தான் உனக்கு மார்க் போட்டு வெற்றி பெறச் செய்யுமா? என்று நக்கலாக கேட்டாள். எனக்கு பக்தியுடன் நம்பிக்கை இருக்கிறது. அது என் விருப்பம் என்றாள் புவனா. இந்த சாமியை எனக்கு காமிக்க முடியுமா? என்றாள் கேளியாக! அடுத்த கணம் அவள் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. புவனா தான் திலகாவை அடித்தாள். ஏன் ‘டீ’ அடித்தாய் என்று முறைத்தாள் திலகா! வலி தாங்க முடியாமல். வலிக்குதா! என்றாள் புவனா. ஆமாம் என்ற திலகா, கண்ணில் இருந்து கண்ணீர் கூட வந்து விட்டது. வலிக்குது தானே திலகா! அந்த வலியை எனக்கு கொஞ்சம் காட்டேன் என்றாள் புவனா. வலியை எப்படி காட்டுவது என்றாள் திலகா. அதுபோலத்தான் பக்தி…

Read More

மன்னர் தந்த பரிசுகளுடன் பெரிய வீட்டிற்குப் போனார்கள் கமலாவும், ராமனும். பால் மாடு, ஆடை, அணிகள், நல்ல உணவு என்று குறை இல்லாமல் வாழ்ந்தார்கள். இதைப் பார்த்த அடுத்த வீட்டு கிழவிக்குப் பொறாமையாக இருந்தது.கமலாவின் பெருமைகளைக் குறைக்க ராமனை கொல்வதே சிறந்தது என முடிவு செய்தான். “ராமனிடம், ராமா எனக்கு வயதாகிவிட்டது. தள்ளாமையாய் இருக்கிறேன். நகரத்தில் இருக்கும் என் பேத்தி கர்ப்பமாய் இருக்கிறாள். அவளுக்கு அப்பம் என்றால் உயிர் அப்பம் சுட்டுத் தருகிறேன் கொடுத்து விட்டு வருகிறாயா?” என்று கேட்டாள்.“ ஆகட்டும் பாட்டி… எனக்கும் வழியில் செல்லும்போது சாப்பிடுவதற்கு அப்பம் தர வேண்டும். அப்பம் என்றால் எனக்கும் பிடிக்கும்” என்றான் ராமன். உனக்கு நூறு அப்பம் தருகிறேன் என்றவள், அப்பம் சுடச் சென்றாள் மாவில் கொடிய விஷம் கலந்து அப்பம் செய்து ராமனிடம் கொடுத்தாள். ராமனும் வழிலையே இறந்து விடுவான். ஊர் போய் சேரமாட்டான் என்பது அவளது நம்பிக்கை. அதனால், எல்லாமே…

Read More

ஆத்திசூடி கதைகள்55- தக்கோ னெனத்திரி பொங்கல் விடுமுறை முடிந்து அப்பா வேலைக்கு கிளம்பி விட்டார். அக்கா பள்ளிக்கு போய்விட்டாள். அம்மா எல்லாரையும் அனுப்பிவிட்டு ஓய்வாக அமர்ந்து இருந்தாள். அமுதா, மட்டும் விளையாட யாரும் இல்லாமல் தனியாக விளையாடியவள்.. கண்ணுக்கு எறும்பு வரிசையாகச் செல்வதைக் கண்டு வியப்பாக இருந்தது. கரும்பு வெட்டி சாப்பிட்டதை ஒரு கூடையில் அம்மா போட்டு வைத்து இருந்தார்கள். அந்த கரும்பில் சிறு… சிறு துண்டுகளை எறும்பு வரிசை… வரிசையாக எடுத்துச் செல்வதைப் பார்த்த அமுதா வியப்பில் இருந்து விடுபடவே இல்லை. இந்த சின்னஞ்சிறு எறும்புக்கு இவ்வளவு ஒழுங்காகச் செல்ல யார் சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். வியப்பு மேலிட அம்மாவிடம் போய் கேட்டாள் அமுதா. அம்மாவும் குழந்தை கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னாள். இந்த சிறிய எறும்பு மழைக்காலத்திற்கு தேவைக்கான உணவை தனது கூட்டத்துடன் சென்று சேகரித்து வைத்துக் கொள்ள ஒழுங்காக சிறுக… சிறுக சேமிக்கிறது. நேர்மையும், ஒழுக்கமும் இருப்பதால்…

Read More

46-சித்திரம் பேசேல்ஓவியாவிற்கு பூக்கள்என்றால் மிகவும் பிடிக்கும்.வண்ண…வண்ண மலர்களாகத் தொட்டியில் வளர்த்து வந்தாள்.ஒரு நாள் ஓவியாவின்மகன் கண்ணனும், ராமனும் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.எதிர் பாராத விதமாக அம்மா ஆசையாக வளர்த்த தொட்டி செடியில் பட்டு தொட்டி உடைந்து சிதறிவிட்டது.இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.அம்மா…திட்டுவார்கள் என்ற பயத்தில்!அம்மா… கேட்பதற்கு முன்பே கண்ணனும், ராமனும் அம்மா…அம்மா…என்று அம்மாவிடம் வந்தார்கள்.என்ன என்று கேட்டாள் ஓவியா.இருவரும் ஒரே குரலில் அம்மா பூதொட்டி உடைந்து கிடக்கிறது.யார் உடைத்தார்கள் என்று தெரியவில்லை என்றனர்.ஓவியா வந்து பார்த்தாள்அவளுக்கு கண்ணீர் வராதகுறை உடைந்த தோட்டியை எடுத்து கீழே போட்டுவிட்டு.அதட்டி கேட்டாள் யார் செய்த வேலை உண்மையைச் சொல்லுங்கள் என்று கம்பை எடுத்து இருவரையும் அடிக்க ஓங்கினாள்.நாங்கள் விளையாடும்போது பந்து பட்டு உடைந்து விட்டது என்று ராமன் கூற.இதை முன்பே சொல்ல வேண்டியது தானே! எதற்கு பொய் சொன்னீங்கள்.மற்றவர்களையும் சந்தோசப் பட்டு தேவை இல்லாமல் மனக்கஷ்டம்வரும் இல்லையா?இனி இப்படி பொய்யை மெய் போல…

Read More