61-தெய்வ மிகழேல்
வகுப்பறையில் குழுவாகப் படித்துக் கொண்டு இருக்கும் போது புவனா, புத்தகத்தை திலகா வாங்கினாள் படிக்க.
அதில் சாமி படம் இருந்தது ஒரு பக்கத்தில். அதை எடுத்த திலகா, இந்த சாமி தான் உனக்கு மார்க் போட்டு வெற்றி பெறச் செய்யுமா? என்று நக்கலாக கேட்டாள்.
எனக்கு பக்தியுடன் நம்பிக்கை இருக்கிறது. அது என் விருப்பம் என்றாள் புவனா.
இந்த சாமியை எனக்கு காமிக்க முடியுமா? என்றாள் கேளியாக!
அடுத்த கணம் அவள் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. புவனா தான் திலகாவை அடித்தாள்.
ஏன் ‘டீ’ அடித்தாய் என்று முறைத்தாள் திலகா! வலி தாங்க முடியாமல்.
வலிக்குதா! என்றாள் புவனா.
ஆமாம் என்ற திலகா, கண்ணில் இருந்து கண்ணீர் கூட வந்து விட்டது.
வலிக்குது தானே திலகா! அந்த வலியை எனக்கு கொஞ்சம் காட்டேன் என்றாள் புவனா.
வலியை எப்படி காட்டுவது என்றாள் திலகா.
அதுபோலத்தான் பக்தி என்பது மனம் சம்பந்தப்பட்டது. உனக்கு பிடிக்க வில்லை என்றால் தெய்வத்தை, தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை கேளி பேசக்கூடாது என்ற புவனா…
புலவர் ஔவையார் “தெய்வ மிகழேல்” என்று கூறி இருக்கிறார் என்றாள்.
பேச வார்த்தைகள் இல்லாமல் மௌனமாக அந்த இடத்தை விட்டு சென்றாள் திலகா.