46-சித்திரம் பேசேல்
ஓவியாவிற்கு பூக்கள்
என்றால் மிகவும் பிடிக்கும்.
வண்ண…வண்ண
மலர்களாகத் தொட்டியில் வளர்த்து வந்தாள்.
ஒரு நாள் ஓவியாவின்
மகன் கண்ணனும், ராமனும் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
எதிர் பாராத விதமாக அம்மா ஆசையாக வளர்த்த தொட்டி
செடியில் பட்டு தொட்டி உடைந்து சிதறிவிட்டது.
இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
அம்மா…திட்டுவார்கள் என்ற பயத்தில்!
அம்மா… கேட்பதற்கு முன்பே கண்ணனும், ராமனும் அம்மா…அம்மா…என்று அம்மாவிடம் வந்தார்கள்.
என்ன என்று கேட்டாள் ஓவியா.
இருவரும் ஒரே குரலில் அம்மா பூதொட்டி உடைந்து கிடக்கிறது.
யார் உடைத்தார்கள் என்று தெரியவில்லை என்றனர்.
ஓவியா வந்து பார்த்தாள்
அவளுக்கு கண்ணீர் வராதகுறை உடைந்த தோட்டியை எடுத்து கீழே போட்டுவிட்டு.
அதட்டி கேட்டாள் யார் செய்த வேலை
உண்மையைச்
சொல்லுங்கள் என்று கம்பை எடுத்து இருவரையும் அடிக்க ஓங்கினாள்.
நாங்கள் விளையாடும்
போது பந்து பட்டு உடைந்து விட்டது என்று ராமன் கூற.
இதை முன்பே சொல்ல வேண்டியது தானே! எதற்கு பொய் சொன்னீங்கள்.
மற்றவர்களையும் சந்தோசப் பட்டு தேவை இல்லாமல் மனக்கஷ்டம்
வரும் இல்லையா?
இனி இப்படி பொய்யை மெய் போல சொல்லக் கூடாது என்று ஓவியா கூறினாள்.
இதே கருத்தை புலவர் ஔவையார் முன்பே “சித்திரம் பேசேல்”
என்று சொல்லி இருக்கிறார்கள்.
