Author: admin

மனம் விரும்பி காடு- சென்றாய் வனம் சென்று வள்ளிகண்டாய் தனம் வாங்கி குறிசொன்னாள்- வள்ளி தினம் நினைத்து மனம் புரிந்தாள்.

Read More

சீட்டுக் கவி கேட்டு மகிழ சிறுவனாக வருவாய் நீ! சிட்டுக் குருவி போல பறந்து சிந்தை மகிழுந்து நெகிழ்வாய்! ஆட்டுவிக்கும் ஆண்டவன் நீயே உன் அருளை கொடுத்து காப்பாய்! மாட்சி தந்து மனம் நெகிழ்ந்து ஆட்சி செய்ய வருவாய்.

Read More

கேசவா! என்னிடம் உயர்ந்த பிரியமான பக்தி கொண்ட பக்தர்களிடத்தில் உபதேசத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! ஒருவன் தானாகவே பகவானிடம் நம்பிக்கை கொண்டு திருநாமங்கள், கல்யாண குணங்கள், லீலைகள், பிரபாவம், சுயரூபம் இவற்றை நினைத்த அளவிலேயே அவருடைய புத்தியில் மனம் உருகி பகவானுடைய மகிழ்ச்சிக்காக மட்டுமே… கீதா சாஸ்திரத்தைப் பற்றி விரிவுரை ஆற்ற வேண்டும். அவற்றை விளக்கிப் பொருள் கூற வேண்டும். சரியாக புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். அவற்றின் கருத்துக்களை நயம்பட உரைக்க வேண்டும். கேட்பவர்களின் ஐயங்களை தீர்க்க வேண்டும். கீதையின் உபதேசங்களை அவர்கள் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். கீதையின் உபதேசத்தின் படி வாழ்க்கை நடத்துவதற்குரிய மன உறுதியை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் இவை யாவும் பகவானிடம் பரம பிரியம் பூண்டு பகவானுடைய பக்தர்களிடையே கீதை உபதேசத்தை கூறுவதாகும். இவ்வாறு என்னிடம் பக்தி செய்ய வேண்டும். என்ற ஒரே குறிக்கோளுடன் எனது…

Read More

அர்ச்சுனனின் வருத்தத்தைப் பார்த்த கிருஷ்ணன். அர்ச்சுனா! நீ எனக்கு மிகவும் பிரியமானவன். உனக்கும், எனக்கும் உள்ள பாசப் பிணைப்பு அசையாதது உறுதி மிகுந்தது. ஆகவே, நீ எவ்விதத்திலும் வருந்தாதே என்று உற்சாகம் மூட்டுகிறார்.நீ எனக்கு மிகவும் நெருங்கிய அன்பன். அதனால், உன் மேன்மையின் பொருட்டு உன்னிடம் வெளிப் படுத்துகிறேன். “நான் இப்போது சொல்லப்போவது உனக்கு மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும்” என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! நீ என்னிடம் மனதைச் செலுத்து என்னிடமே பக்தி கொண்டிரு. என்னையே வழிபடு என்னையே வணங்கு இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இதை நான் உனக்கு உண்மையென உறுதி கூறுகிறேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக் குரியவனாக இருக்கிறாய். உனக்கு என்னிடம் திடமான நம்பிக்கை வளர வேண்டும் என்ற எண்ணத்தினாலும்…. அர்ச்சுனனை நிமித்தமாகக் கொண்டு, தகுதி பெற்ற மற்ற பக்தர்களுடைய நம்பிக்கையைத் திடப்படுத்துவதற்காகவும் பகவான் மேலே சொன்னவாறு சபதம் செய்கிறார். மேலே சொன்ன விதம்.…

Read More

இவ்விதம் பக்தன் துயரங்களையும், தளைகளையும் அறவே அடித்துக் கொண்டு போய்விடும். பின் துயரங்கள், தளைகள் அனைத்தும் நீங்கப் பெற்று எப்பொழுதும் பரமானந்தத்தைப் பெறுகிறான். ஆனந்த மயமான பூரண பிரம்மமான பரமாத்மாவை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன். அர்ச்சுனா! மறை பொருளுக்கு எல்லாம் மறைபொருளான ஞானம் என்னால் உனக்கு கூறப்பட்டது. இப்பொழுது நீ ரகசியமான இந்த ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய் என்கிறார். கேசவா! மறை பொருளுக்கு எல்லாம் மறைபொருள் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! உலகியலிலோ, சாஸ்திரங்களிலோ எத்தனையோ மறைத்து போற்றப்பட வேண்டிய ரகசியங்கள் இருக்கலாம். அவை, எல்லாவற்றிலும் பகவானுடைய குணங்கள், பிரபாவங்கள் சுயரூபம் இவற்றின் உண்மை அறிவைப் புகட்டக் கூடிய உபதேசம். மேலும், சிறப்பாக மறைத்துப் போற்றப்பட வேண்டியது ஆகும். ஆகவே, இவ்வுபதேசத்தின் பெருமையையும், தகுதியற்றவர்களுக்கு இந்த உபதேசத்தை வெளியிடக்கூடாது. என்பதையும் உணர்த்துவதற்காக “மறைபொருளுக்கு எல்லாம் மறைபொருளான ஞானம்” என்ற அடைமொழி…

Read More

இப்பயனாக தூய்மையற்ற பாழ் நரகத்தில் வீழ்கிறார்கள். அதாவது, மலம், சிறுநீர், இரத்தம், கொழுப்பு முதலிய நாற்றம் உடைய பொருட்கள் நிறைந்ததும்… துன்பம் தருவதுமான பயங்கர நரகத்தில் வீழ்வார். இவ்வாறு அசுர இயல்பு உடையவர்களுக்கு ஏற்படும் இழிந்த நிலையை கூறுகிறார்கள் கிருஷ்ணன். தன்னைத் தானே உயர்ந்தவனாக நினைத்துக் கொள்பவர்களும், கர்வம் உடையவர்களும், செல்வம், தற்பெருமை, செருக்கு உடையவர்களும் பெயர் அளவில் யாகம் என்ற செயல்களால் ஆடம்பரமாக சாஸ்திர விதிகளை மீறி யாகம் செய்கிறார்கள். அகங்காரத்தையும், உடல் வலிமையையும் கர்வத்தையும், கோபம் முதலியவற்றையும் கைக்கொண்டு பிறரை இகழ்கின்றவர்களாகத் தம் உடலிலும், பிற உடலிலும் இருக்கும் இறைவனை மறந்து தாமே எல்லாம் என்று கர்வப்படுகிறார்கள். பிறரிடம் குற்றம் குறை காண்பது. குறை கண்ட பின் அவர்களை நிந்திப்பது. அவர்களுடைய நற்பண்புகளைக் குறைத்துப் பேசுவது. நற்பண்புகளைக் குற்றமாக எடுத்துச் சொல்வது ஆகியன எல்லாம் அசுர குணமாகும். இவர்கள் சாதாரண மனிதர்களை மட்டும் அல்ல, பகவானையும், சாதுக்களையும், கூட…

Read More

அர்ச்சுனா! பரமபதத்தை அடைந்த பிறகு மனிதர்கள் சம்சாரத்திற்குத் திரும்புவதில்லை அந்த அவயம் பிரகாசமான பரம பதத்திற்கு சூரியன், சந்திரன், அக்னி தேவன் மூவரும் ஒளி தருவதில்லை. அது என்னுடைய மேலான இடமாகும். மாயையைக் கடந்த என்னுடைய பரமபதம் என் சுயரூபம். அதை அடைவதே பரமகதியாகும். அர்ச்சுனா! ஆதவன் சுடுவதில்லை, காற்று வீசுவதில்லை, நிலா ஒளி வீசுவதில்லை, நட்சத்திரங்கள் மின்னுவதில்லை, நெருப்பு எரிப்பதில்லை. எப்பொழுதும் ஆனந்தமயமானது, பரமானந்த மயமானது, அமைதியானது, பழமையானது, எப்பொழுதும் மங்கலமயமானது எல்லோரும் விரும்பத்தக்க இடமே பரமபதம் என்கிறார் கிருஷ்ணன். மனித உடலில் என்றும் உள்ள ஆத்மா என்னுடைய அம்சமே. அதுவே, பிரகிருதியில் உள்ள மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்க்கிறது. கேசவா! ‘மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்ப்பது’ என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! ஐந்து அறிவுப் புலன்களும், மனமும் ஆக ஆறும் தான் எல்லா போகங்களையும் அனுபவிப்பதில் முக்கியமானது. ஆத்மா ஒரு உடலில் இருந்து…

Read More

அர்ச்சுனா! பரமபதத்தை அடைந்த பிறகு மனிதர்கள் சம்சாரத்திற்குத் திரும்புவதில்லை அந்த அவயம் பிரகாசமான பரம பதத்திற்கு சூரியன், சந்திரன், அக்னி தேவன் மூவரும் ஒளி தருவதில்லை. அது என்னுடைய மேலான இடமாகும். மாயையைக் கடந்த என்னுடைய பரமபதம் என் சுயரூபம். அதை அடைவதே பரமகதியாகும். அர்ச்சுனா! ஆதவன் சுடுவதில்லை, காற்று வீசுவதில்லை, நிலா ஒளி வீசுவதில்லை, நட்சத்திரங்கள் மின்னுவதில்லை, நெருப்பு எரிப்பதில்லை. எப்பொழுதும் ஆனந்தமயமானது, பரமானந்த மயமானது, அமைதியானது, பழமையானது, எப்பொழுதும் மங்கலமயமானது எல்லோரும் விரும்பத்தக்க இடமே பரமபதம் என்கிறார் கிருஷ்ணன். மனித உடலில் என்றும் உள்ள ஆத்மா என்னுடைய அம்சமே. அதுவே, பிரகிருதியில் உள்ள மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்க்கிறது. கேசவா! ‘மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்ப்பது’ என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! ஐந்து அறிவுப் புலன்களும், மனமும் ஆக ஆறும் தான் எல்லா போகங்களையும் அனுபவிப்பதில் முக்கியமானது. ஆத்மா ஒரு உடலில் இருந்து…

Read More

கேசவா! ‘பிரம்மத்தை அடைய தகுதி பெறுகிறான்’ என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். குணாதீீத நிலையை அடைந்தவன் பிரம்மத்தை அடையவும் தகுதி பெறுகிறான். குணம் அற்ற, உருவமற்ற சத்,சித், ஆனந்தமயமான பூரண பிரம்மத்தை அடைகிறான். பிரம்மத்தை அடைந்தவனுக்கு அடைய வேண்டியது வேறு ஒன்றும் இல்லை. பிரம்மத்துடன் இரண்டறக் கலக்கும் தகுதியைப் பெறுகிறான். உடனே, அவனுக்கு பிரம்ம நிலை கிடைத்து விடுகிறது. அர்ச்சுனா! அழிவற்றதான பரபிரம்மத்திற்கும், இறவா நிலைக்கும் எப்பொழுதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடம் நானே என்கிறார் கிருஷ்ணன். கேசவா! ‘பிரம்மத்திற்கு நானே உறைவிடம்’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! பிரம்ம சகுணமான பரமேஸ்வரன் ஆகிய என்னைத் தவிர வேறல்ல பிரம்மத்தை அடைவது என்னை அடைவதாகும். சிவபெருமான், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் முதலிய பகவானுடைய சகுணமான உருவமுள்ள விஸ்வரூபமும் அகில உலகமும் பகவானுடைய விராட் ரூபமே என்கிறார் கிருஷ்ணன். ‘தர்மங்களைக் கடைப்பிடிப்பவர்கள் வேறு பயனைப்…

Read More

87-அப்பா என்றும் அப்பன் நீயே !     ஆதரவு தருபவன் நீயே! சுப்பா என்ற சுந்தரன் நீயே !        சுகந்த மலர் நீயே! குப்பா என்ற குமரன் நீயே!       குமரிக் கடலும் நீயே! தப்பா என்ற தண்டபாணி நீயே !        தகுதி வளர்ப்பவன் நீயே!

Read More