புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி
======================
புதுச்சேரி அரசியலில் எப்போதும் பரப்பரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த தேர்தலிலும் பரபரப்பு அடங்கி இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்குபலம் பெற்று உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சிப்பொறுப்பில் இருந்த என்.ஆர். கட்சி (ரங்கசாமி கட்சி) 8 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

கட்சி தொடங்கி இரு மாதங்களில் ஆட்சியமைத்த புதுச்சேரி ரங்கசாமிக்கு மீண்டும் ஆட்சியைத் தர பொதுமக்கள் மறுத்து மவுனமாக தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய இரு மாதங்களிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் ரங்கசாமி.

உள்ளூர் கட்சி என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லாத நிலைதான் உருவானது.. ஏடிஎம் இயந்திரத் தொழிற்சாலை, சாப்ட்வேர் நிறுவனங்கள் உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.



உணவுப் பொருட்களின் விலை உயர்வு ,மதிப்பு கூட்டு வரியான ‘வாட் வரி’ விதிப்பிற்கு பிறகு ஏற்பட்ட விலை உயர்வு அது ரங்கசாமியின் ஆட்சியால் வந்த மாற்றம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவானது.இதையெல்லாம் ரங்கசாமி அரசுதீர்க்கும் என காத்திருந்தனர் புதுச்சேரி மக்கள். ஆனால், பிரச்சினைகள் கூட தீர்க்கவில்லை.இதுவே புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"புதுச்சேரியில் அமைச்சர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ‘மத்திய அரசுடன் இனக்கமான ஒரு போக்கை கடைப்பிடித்து மாநில அரசுக்கான வளர்ச்சியை பெற வேண்டும்.’ வளர்ச்சிக்கான இந்த இலக்கணம் மாநில அரசுக்குத் பொருந்துமோ இல்லையோ மத்திய ஆளுகையின் கட்டுப்பாட்டில் இருக்கிற யூனியன் பிரதேசத்துக்கு நிரம்பவே பொருந்தும்.

இந்த நிலையில் புதுவையில் காங்கிரஸ் கட்சி புதிய ஆட்சி அமைக்கிறது. புதுவை வெ.வைத்தியலிங்கம் முதல் அமைச்சர் ஆக பதவி ஏற்றுள்ளார்.. வைத்தியலிங்கம் நிர்வாக திறமையும் கண்டிப்பும் நிறைந்தவர் .எனவே புதிய ஆட்சி அமைந்தாலும் டெல்லியில் உள்ள பா.ஜ.ஆட்சியுடன் இணக்கமாக செயல்படுவதன் மூலம் புதுச்சேரிக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கச் செய்வார் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தீர்வு காணப்படாத பல பிரச்சினைகளை புதிய அரசு தீர்த்து வைக்கும் என்று புதுச்சேரி மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.அவர்கள் எண்ணம் நிறைவேற புதுச்சேரி அரசுக்கு ”ஸ்ரீ ஐசுவரியம் ”இதழ் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறது.
=====================

Share.

Leave A Reply