புதுச்சேரி கவர்னராக
கிரண் பேடி பதவி ஏற்றார்

 புதுச்சேரியின் 24வது துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவி ஏற்றுக்கொண்டார்.

 சென்னை உயர் நீதிமன்ற நீபதிபதி ரமேஷ் அவருக்கு பதவிப் பிரமானம் மற்றும் ரகசியக்காப்பு பிரமாணம் செய்துவைத்தார். 



பஞ்சாபின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையுடையவர்கிரண்பேடி. அப்போது அவர் பேசும்போது,”புதுச்சேரியில் தொழில்வளர்ச்சியைப் பெருக்கவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், அனைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும், புதுச்சேரியில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன்.”என்று கூறினார். 

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, கட்சித் தலைவர் நமச்சிவாயம், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கிரண்பேடிக்கு மலர்க்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்

Share.

Leave A Reply