உறுப்பில் முதன்மை கண்ணப்பா
உண்மை புரிவாய் நீயப்பா
வெளியுலகைப் பார்ப்பது கண்ணப்பா
வெற்றி தருவதை உணரப்பா

கண்ணில்லா வாழ்வு இருளப்பா
கடமையைச் செய்து உயரப்பா
கணினி உலகம் இதுவப்பா
கற்று அறிவது நலமப்பா

காய்கறி அதிகம் உண்ணப்பா
கீரையை உணவில் சேரப்பா
கண்ணை நீயும் காத்திடப்பா
நல்ல வெளிச்சத்தில் படியப்பா

கண்ணை தானம் செய்யப்பா
கண்ணாடி போட்டாலும் செய்யப்பா
பிறருக்கு உதவி வாழப்பா
உயிர் பிரிந்த பின்பும் வாழுமப்பா

Share.

Leave A Reply