கோபப்படுவதற்கு முன்பாக…..
கேலி செய்வதற்கு முன்பாக….
நடப்பவைகளை உற்றுநோக்குவோம்…

நாம் அனைவரும் தனிமைப்பட்டு போனோம்
இந்த உலகில் நாம் ஆரோக்கியமாக வாழ
எந்த கூட்டமும் தேவையில்லை …
என்று கற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா …

எல்லா கோவில்களும் மூடப்பட்டுவிட்டன
கடவுள்கள் கோவில்களில் இல்லை என்று
கற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா…..

தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது
மாணவர்களுக்கு பரீட்சைகள் தேவையில்லை
என்று கற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா….

எந்த கூட்டமும் இல்லை !
எந்த கூட்டத்தினாலும் எதுவும் நிகழப் போவதில்லை
என்று தெளிவு படுத்தி இருக்கிறது கொரோனா….

குழந்தையோடு விளையாடும்
சந்தோஷமான நாட்களை
பெற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா….

தன் மனைவியோடு பேச
சந்தர்ப்பம் வழங்கி இருக்கிறது கொரோனா….

தன் வீட்டை சுற்றும் பறவைகளின் சப்தங்களை
கேட்க வைத்திருக்கிறது கொரோனா….

பயந்து ஓடிய விலங்குகளை எல்லாம்
வீதியில் உல்லாசமாக
உலாவ விட்டிருக்கிறது கொரோனா,….

கூட்டுக் குடும்பத்தை விட்டு விலகிய மனிதர்களை
வீட்டுக்குள் வைத்திருக்கிறது கொரோனா

பழமையான விளையாட்டு எல்லாம்
விளையாட வைத்திருக்கிறது கொரோனா

நிசப்தத்தின் அமைதியை உணர
வைத்திருக்கிறது கொரோனா….

அடுப்பாங்கரை செல்லாதவர்களையும்
சமைக்க வைத்திருக்கிறது கொரோனா….

உறங்கிக்கிடந்த புத்தகங்களைப்
படிக்க வைத்திருக்கிறது கொரோனா….

வேலைப்பளு ஏதுமின்றி வெறும்
மனிதனாய் மாற்றியிருக்கிறது கொரோனா….

பணம் உள்ளவனும் இல்லாதவனும் சமம் என்று
கற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா

உலகம் முழுக்க கைகூப்பி வணங்கும்
தமிழ் மரபை சொல்லிக் கொடுத்திருக்கிறது கொரோனா….
இன்னும் நிறைய கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது கொரோனா….

சுத்தமாக பாதுகாப்பாக இருப்போம்….

Share.

Leave A Reply