உடன் பிறந்தவற்றுள் அவைகளும் உண்டு எப்போதும் உடன் இருந்தவைகள் அவை
அவைகளுக்கும் என்மீது அலாதி பிரியம் உண்டு
நான் எங்கும் சென்று எதை மறந்தாலும்
தானாய் வந்து ஒட்டிக்கொள்ளும்
நான் கண்டிராத மகிழ்ச்சிகள் பெற்றிடாத வெற்றிகள் என நான் அறிந்திடாத பல என்னை
விட்டுத் தள்ளியே இருந்தன.
இல்லாத ஒன்றின் மீது தான் காதல் வரும் எனக்கும்
காதல் வந்தது என்னிடம் இல்லாதவைகளில் மீது காதலின் ஆற்றலை நான் உரைக்க தேவை இல்லை
எனக்குள் பிறந்த உற்சாகம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்
மாற்றியது என்னோடு
ஒட்டிப் பிறந்திருந்தவைகளை அது ஓட்டியது
காதலிப் பவர்களுக்குத்தான் தெரியும்
காதலில் வெற்றி அடைவது அவ்வளவு சுலபம் இல்லை என்று
நான் வெற்றியையே காதலாய் அடையத் திரிகிறேன்
என் நிலைமை கேட்கவா வேண்டும்
உடன் பிறந்தவையோ பிரிந்து செல்ல
மறுக்கிறது காதலிப்பவையோ கண்டு கொள்ள மறுக்கிறது
நான் துண்டு துண்டாய் போயிருந்தால்
கொஞ்சம் நிம்மதியாய் இருந்திருக்கும்
நான் துவண்டு போன அந்த நேரம்
என் நெஞ்சில் நெருப்பு போல் வந்தமர்ந்து
கொளுந்து விட்டு எரிந்தான்
நண்பன் என்று உரைத்தான் நம்பிக்கையாய் நிறைந்து விட்டான்
தன்னம்பிக்கை தீ
பூந்தணலாய் எரிந்தது
எனக்குள்… அது
ஆற்றலாய் வளர்ந்தது
வேரென நிலைத்தது வானையும் இடித்தது
என் காதலை கணித்தது
காதல் கைகூடியது
காணாமல் போனது கவலையும் கண்ணீரும்.