விவேகானந்தர் தேடிய
நூறு பேர்களில் முதல் ஆள் இவர்
நூறு கோடி பேர்களில்
முதல் குடிமகனாய் விளங்கியவர்
ஒரு தனி மனித ஒழுக்கத்தில்
தாரக மந்திரம் இவர்
விண்கலம் அமைக்கத் தெரிந்த
எந்திர மனிதன் இவர்
விருதுகள் தஞ்சம் கொண்ட
பெருமை மிக்க நாயகர்
நாங்கள் கண்டறியாத
உத்தம புருஷர்களை எல்லாம்
எங்கள் கண்முன் நிறுத்தியவர்
முடி வைத்த காந்தி அவர்
சபாரி அணிந்த நேரு அவர்

தன் எளிமையால் மக்களின்
இதயங்களில் நிறைந்தவர்
இளைஞர் களின் இதயங்களில்
என்றும் நிலைத்து விட்டவர்
அவர் இறுதி மூச்சுவரை
கற்பித்துக்கொண்டு இருந்தவர்
தான் இறந்த பிறகும்
இன்னும் கற்றுக் கொடுப்பவர்
மரணம் இல்லா வாழ்வு வாழ்ந்து
சரித்திரம் ஆனவர் அவர்
சாதிக்க முனையும் அனைவருக்கும்
படிப்பினை ஆனவர் அவர்
மனிதர்களுக்கு இதயம் இருப்பதை
அவர் மரணத்தின் மூலம்
அறிந்து கொண்டோம்
அவர் கனவுகளை நினைவாக்க
கைகோர்த்து செயல்படுவோம்.