வீசும் தென்றல் காற்றுக்குள் சூறாவளியும் சுழலும் உண்டு- நதி
பாய்ந்து செல்லும் அழகிற்குள்ளும்
ஊரைக் கொல்லும் வெள்ளம் உண்டு.

மழை தூருரம் மென்மைக் குள்ளும்
இடியும், புயலும் இருப்பதுண்டு -கடல்
அலையின் சிரிப்பிற்குள்ளும் கூட
பேரலையின் கோபம் உண்டு.

சிகரம் தொட்ட மலைகள் கூட நெருப்பை
வாரி இறைப்பதுண்டு- இருக்கும்
சம நிலமும் கூட பிளந்து போகும் தன்மை உண்டு.

இரக்கம் உள்ள உயிர்க்குள்ளும் கொலை
செய்யும் சினம் உண்டு- மனிதனுக்கு
சிரிக்க தெரிந்த போதும் கூட அரக்க குணம் அதிகம் உண்டு.

இயற்கை தந்த அனைத்திலுமே இன்ப துன்பம் இரண்டும் உண்டு -அதை
புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தால்
பூவுலகில் புகழும் உண்டு.

Share.

Leave A Reply