கருவறை இருட்டு கண்ணுக்கு இருட்டாக 

கொடி     உணர்வில் உறவு புரிந்தது 

ஆயிரம்   பேர் நின்றால்  கூட 

அன்னை  முகம்  தனியாய் ஈர்க்கும் 

நான் குப்புற விழுந்த போதும் 

நடக்க விழுந்து  எழுந்த போதும் 

வாழ்க்கை தத்துவம்  புரிய வைத்தாள்

விழுந்தால் தானே எழ முடியும் 

திக்கி…திக்கி  பேசும் மழலைமொழி 

தந்தைக்கு மொழிபெயர்ப்பு அம்மா செய்தாள்

அப்படியா என அணைத்தார்  தந்தை 

அப்போது புரிந்தது பாச உணர்வு 

தளர்ந்த தாத்தா முதிர்ந்த பாட்டி 

தந்தையின் பரிவு தாயின் அன்பு 

தங்கையின் குறும்பு தாளாத மகிழ்வு 

குடும்பம் இதுவென்று அப்போது புரிந்தது 

கல்விச் சாலையில் கால் பதித்து 

கல்விக் கண்ணைத்  திறந்த போது 

உலகம் எல்லாம் புத்தக வடிவில் 

உயர்ந்த நெறியை உண\ர வைத்தது 

தீயவர் நட்பு  கிடைத்து  விட்டால் 

காட்….டாற்றில்  சிக்கிய மரமாவோம் 

நல்ல நட்பு  நாளும் வளர்க்க 

நல்ல பண்பு நாளும் வளரும் 

அன்னை  சொல்ல மறந்த போதும் 

தந்தை கடைப் பிடிக்காத போதும் 

வாழ்க்கை நெறியை வழியாய் சொல்ல 

பாட்டன் உண்டு குறளின் வடிவில் 

சிட்டாய் பறக்கும் சிட்டுக் குருவியாய் 

சிறகடித்துப் பறக்கும் சிறு  பருவம் 

துன்பம் எதுவும் அறியாப்  பருவம்

துடிப்பாய்  துணிந்து செய்யும்  பருவம் 

பச்சை மரத்தில் அடிக்கும் ஆணியாய்

பளிச்சென  பதியும் சின்னப் பருவம் 

பெற்றோர் , உற்றோர்  அமையும் விதத்தில் 

வளர்ந்து வரும் பேதைப் பருவம் 

கற்பது கூட சிறு வயதில்தானே/ 

காலத்தை கடந்தும், கூட வருமே /

கால கண்ணாடியே  குழந்தைப் பருவம் 

காத்து  சீராய் வளர்ப்பது சிறப்பு 

குழந்தையில் குறும்பு செய்தவரே  பெற்றோர் 

பெற்றோர்  ஆனதும் ராணுவ உத்தரவு 

கழுகாய்  இருந்து வார்த்தையால்  கொத்துவர் 

பயந்து ஒடுங்கி/  பாய்வது இளமையில்/

குறும்புகள் செய்வது தானே குழந்தையுள்ளம் å

கோபம் கொள்வது என்ன நியாயம் ?

பழத்தைக் கூட  பார்த்து படைக்கிறான் 

பக்குவமாய் சொல்ல ஏன் மறக்கிறோம் .

குழந்தை கேட்கும் கேள்வி  கணைகள் 

எடுத்துச் சொல்ல இயலாது வீழ்வர் 

அதிக பிரசங்கி நீயென  பட்டமிட்டு 

அறிவை அப்படியே  ஒடுங்கச் செய்வர் 

படிபடி என சொல்லும் பெற்றோர் 

வேறு நூல் படிக்க விடார் 

வாழ்க்கை நெறியை கற்றுக் கொள்ள 

வளமிக்க நூல்களே வாழவைக்கும் நெறிமுறை ./

சினிமா என்பது பொழுது போக்க 

சீர் கெடும் ஆபாசப் போக்கால் 

மறைபொருள் என்பது வெளிச்சமாகி 

பிஞ்சில்  பழுத்து  வெம்பும் நிலை /

நீர்க்குமிழி நிலையற்று  மறைவது போல் 

குழந்தைப் பருவமும் மறைவது தான் 

நேர்மை எண்ணம் மனதில் பதிந்தால் 

வல்லரசு இந்தியாவை விரைவில் காண்போம் 

உதிரத்தை பாலாக்கி தருபவள் தாய் 

உணர்வை மொழியாக்கி சொல்பவள் தாய் 

தாய் சொல்வதால் தாய்மொழி ஆயிற்று 

தாய் நினைத்தால் மொழியும் வளர்ப்பாள்

Share.

Leave A Reply