இது ஒரு பூக்கும் தாவரம். இது ஆமணக்கு குடும்பத்தைச் சார்ந்தது.  இது பொதுவாக எல்லா இடங்களிலும் வளரக்கூடிய செடி.  காடு,  மேடு,  குப்பை,  கூடம் என எல்லா இடங்களிலும் வளரும்.  மழைக்காலங்களில் அதிகமாக காணப்படும்

இது அனைவருக்கும் பயன்படும் மூலிகை தாவரம் தோல் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் இதனை பழமொழியாக ” மேனி துலங்க குப்பைமேனி”  என்பது வாய்மொழி வழக்கில் உண்டு.

இந்த குப்பைமேனியை நன்றாக தண்ணீரில் போட்டு காய்ச்சி கசாயம் போல எடுத்துக் கொண்டால்.  சளி,  இருமல்,  ஆஸ்துமா சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். 

குப்பை மேனியை  கொழுந்தோடு சேர்த்து கிள்ளி எடுத்து வந்து. அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து அதை உடலில் அரிப்பு தோல் சம்பந்தப்பட்ட  பிரச்சனைகள் உள்ள இடங்களில் தேய்த்து விட வேண்டும்.  இல்லை எனில் இந்த பூச்சை உடல் முழுவதும் பூசிக்கொண்டு அரை மணி நேரம் கழித்து குளித்து வர உடலில் உள்ள அனைத்து தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும்.  மேலும் உடல் பள பளக்கும்.

இந்த குப்பைமேனியை அரைத்து  முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்புடன்  பொலிவாக இருக்கும்.  பல் சொத்தை உள்ள இடங்களில் இந்த குப்பைமேனி இலையை அரைத்து அதை சொத்தைப் பல்லின் உள் வைத்து அரைமணி நேரம் கழித்து வாய்கொப்பளித்து  வர பல் வியாதி குணமடையும்.

இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட குப்பைமேனி நாம் அறிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

Share.

Leave A Reply