நீர்
அசுத்தக் காற்றைச் சுவாசித்த இலை
சுத்தக் காற்றைத் தருவது போல்
உப்பு நீரை மேகம் உறிஞ்சி
உமிழும் போது உமிழ்நீர் மழைநீராகும்
நதிநீர் ,குளநீர், ஏரிநீர் வாய்க்கால்
நீராய் பெயர் பலபெற்று செல்கையில்
அணைநீராய் தேங்கிஆகூல் உய்த்துக் கொடுக்கும்
அன்னை போல அன்னம்தரும் உலகிற்கு
நிலத்தடி நீரை மேலே உறிஞ்சி
வளங்கள் சேர்ப்பது புதிய உத்தி
கழிவு நீரை நிலத்தில் விட்டு நிலநடுக்கம்
வராமல் தடுப்பதை ஏன் மறந்தோம் ?
அறிவுள்ள இடத்தில் அகங்காரம் இருக்கும்
கங்கைக்கும் பெருமிதம் தலைக்கனமாய் மாறியதால்
குறுமுனி அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்டாள்
காகம் வடிவெடுத்த விநாயகர் ஓடவிட்டார்
சாந்த வடிவம் அழகின் சிகரம்
கோபச் சீற்றம் புயலும் அழிவும்
பொறுப்பது பெண்ணின் குணம்
பங்கினால் சுனாமி எச்சரிக்கை அறிகுறி
வளையும் நதி வாழ்விற்கு வழிகாட்டி
விதியைப் பழிப்பவன் நீந்த மாட்டான்
வாழ்க்கை நதியில் எதிர்நீச்சல் போட்டு
நீந்தத் தெரிந்தவன் கரை சேருவான்
-செந்தமிழ்வாணி ச. மல்லிகா
சிறந்தது
எது நடக்கக் கூடாதோ
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க வேண்டுமோ
அது நடப்பதே கிடையாது
எதை தேடிச் சென்றேனோ
அது கிடைக்கவே இல்லை
எது கிடைக்க வில்லையோ
அதை மறக்க முடியவில்லை
எதை மறக்கிறேனோ
அதுவே எனக்குக் கிடைக்கிறது
எது கிடைக்கிறதோ
அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
எதை ஏற்க முடியவில்லையோ
அதுவே பழகிவிடுகிறது
எது பழகி விடுகிறதோ
அதுவே ஞாபகத்தில் இருக்கிறது
எது ஞாபகத்தில் இருக்கிறதோ
அதுவே அனைத்தும் தருகிறது
எதை தேடிச் சென்றேனோ அதைவிட
எது கிடைத்ததோ அதுவே சிறந்தது /
-கவிஞர் ச.ம. பாலகிருஷ்ணன்
வ.உ.சிதம்பரனார்
விடுதலை விடுதலை விடுதலை -அடிமை
கொண்ட வெள்ளையன் வெளியேற ஒன்றுபட்டு
வாடும் மக்கள் குரல் எழுப்பி
வீறுகொண்டு எழுந்த போது விடுதலை
அடிமை பட்ட இந்தியா கப்பம்
கட்டும் போது கணக்கில்லா செல்வத்தை
தடிபிடித்த காந்தி கொள்கையில் நின்றவர்
கப்பல் வாங்கி கடலில்விட்டு வென்றவர்
வழக்குத் தொழில் செய்த போதும்
வாழ்வு இழந்து தேசம் காத்தவர்
இழந்த பொருள் அனைத்தும் என்றாலும்
வலிமை கூடி எதிர்த்து நின்றவர்
அடிபட்டு இடிபட்டு இன்னல் பட்டபோதும்
மனம் இடிந்து போகாமல் எதிர்த்தவர்
முடிநரைத்து முதுமை வந்த போதும்
சிறை சென்று செக்கிழுத்த செம்மல்
வலி பொறுத்து இரத்தம் சிந்தி
பொலிவு இழந்த போதும் வீறுகொண்டு
பொலிவு பெற்று பொங்கி எழுந்து
எதிர்த்து நின்ற வேங்கை அவர்
அமர்ந்து இருந்து பல நூல்கள்
படைத்து தந்து வழி வகுத்தவர்
அமரர் ஆனபோதும் கூட நம்
மனதில் நிற்கும் கப்பலோட்டிய தமிழன் –