இராமநாதபுரம் கம்பன் கழக 19 -ஆம் ஆண்டுவிழா இரண்டு நாட்கள் இராமநாதபுரம் காசுக்கடை ஆயிரவைசிய வியாபாரிகள்சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது ,
முதல் நாள் நிகழ்ச்சிக்கு கம்பன் கழகத் தலைவர் அரிமா எம்..ஏ.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கம்பன் கழக செயலாளர் கு.விவேகானந்தன் வரவேற்றார். விழாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன .
இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அரிமா எம்.ஏ.சுந்தர்ராஜன் தலைமை தாங்க, டாக்டர் பரணிகுமார், மற்றும் கவிதா கதிரேசன் முன்னிலை வகித்தனர். பாடகர் அரியமுத்து அவர்களின் இறைப்பாடலுடன் விழா தொடங்கியது .கம்பன் பாடலை தனுஷ்யா மோகன்ராஜ் பாட, பரமேஸ்வரி தமிழ்வாணன் அனைவரையும் வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது .கவிதைகள் சுவையுடன் ரசிக்கும்படி இருந்தது .கவியரங்கத்தை தொடர்ந்து கம்பன் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் கம்பன் விருதுகளை வழங்கினார்.
கம்பன் கல்விக் காவலர் விருது -முனைவர் வி.முத்து, கம்பன் தமிழ்ச் செம்மல் விருது முனைவர் கோ.பெரியண்ணன் கம்பன் எழுத்துச் செம்மல் விருது -ஸ்ரீ ஐசுவரியம் இதழாசிரியர் சோம.சந்திரன்-ச. மல்லிகா ,கம்பன் சடையப்ப வள்ளல் விருது தா. பழனிவேல், கம்பன் கவிசீயம் விருது -சேலம்-பாலன் ஆகியோர் உள்பட பதினான்கு பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றை எஸ்.பி.முத்துராமன் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மாலையில் பாவரசு மு.கண்ணன் எழுதிய கம்பன் காவியத்துள் திருக்குறள் மணிகள் ,கவிதாயினி ச. மல்லிகா எழுதிய விநாயகர் துதிப்பாடல்கள் நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது..நூல்களை எஸ்.பி.முத்துரான் வெளியிட , இராமநாதபுரம் கம்பன் கழக தலைவர் அரிமா எம்.ஏ.சுந்தரராஜன் பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து , கவிஞர் சுந்தர முருகன் கவிஞர் ப. திருநாவுக்கரசு ,சிங்கார உதியன், செ.வ மகேந்திரன் ,டாக்டர் சு.மோகன்.சி.பாலசுப்பிரமணியம், ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நூல்கள் குறித்து உணர்வுப்பாவலர் புதுச்சேரி அ.உசேன் ஆய்வுரை வழங்கிப்பேசினார்.
நிறைவு நிகழ்ச்சியாக பேராசிரியர் தங்க .இராசாராம் தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது .. இந்த விழாவுக்கு அரிமா எம்.ஏ.சுந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.
பட்டிமன்றத்தின் தலைப்பாக ‘வாயு மைந்தனின் செயல்கள் ஏற்கத்தக்கதா ?ஏற்கத்தக்கதல்லதா ?’ என்ற பொருளில் ஏற்கத்தக்க தல்ல என்று ரெ.இராஜ்குமார், ம. எழிலரசி, கோ.சரவணன் ஆகியோரும், ஏற்கத்தக்கதே என்ற தலைப்பில் குரு,ஞானாம்பிகா ,வ.ஆறுமுகம், தா, திருமாறன் ஆகியோரும் சிறப்பான தங்களது வாதங்களை எடுத்து உரைத்தார்கள்.இந்த கருத்தாழமிக்க கருத்துக்களை அனைவரும் ரசித்து கேட்டனர்.முடிவில் நீதி வழங்கிய நடுவர் அவர்கள் ராமபிரானே அனுமனுக்கு கடன்பட்டிருப்பதாக கூறி அவரைஏற்றுக் கொண்டபின் , அனுமனின் செயல்கள் அனைத்தும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளகூடியதே என்று தீர்ப்பு வழங்கினார்.
விழா நிகழ்ச்சியை அமைப்பாளர் கவிஞர் இரா. துரைமுருகன் ஏற்பாடுகளை செய்து சிறப்பாக செய்திருந்தார். கம்பன் கழக தலைவர் சுந்தர்ராஜன் அவர்களின் கண் அசைவிற்கு மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக செயலாற்றிய பொதுச்செயலாளர்புலவர் அ.மாயழகு ,செயலாளர் கு.விவேகானந்தன், திருமதி பரமேஸ்வரி ஆகியோர் பாராட்டும்படி செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை திருமதி உமாமகேஸ்வரி மாரிமுத்து ,இளமதி பானுகோபன்,சண்முகப்பிரியா மோகன்ராஜ்,,தேவி உலகராஜ் ,பிரபாவதி மோகன் ,பு.அரியமுத்து செய்திருந்தனர்.கம்பன் கழகபுரவலர் கவிஞர் டி .கண்ணுசாமி நன்றி கூறினார்.