திணை வீட்டு முருகன் நீயே! திறமை தருபவன் நீயே! சாணை தீட்டும் கருவி நீயே! சாதிக்க வைப்பவன் நீயே!இணை இல்லா முருகன் நீயே ! இன்னல் துரத்துபவன் நீயே! பிணைத்து எம்மை கட்டியவன் நீயே! பிறவி அறுப்பவன் நீயே!
Author: admin
35-தேன் உண்ணும் முருகன் நீயே ! இனிக்கும் தமிழும் நீயே !வான் புகழும் முருகன் நீயே ! வழிகாட்டும் துணை நீயே !மான் மயில் காடு நீயே! மலர் செடியும் நீயே! நான் மாடக் கூடல் நீயே! நாழி கிணறும் நீயே!
473- நாவில் தேன் பழம் மணம் சேர்ந்தால் இனிது நாக விஷம் கொடிது.474- நட்பு கொண்டு சந்தன மணமானால் நாளும் நட்பு வளரும். 475-இசை ஓசை எழுந்து தலைவி இயக்கம் கலைமகள் தானே! 476-ஈக்கு இடம் கொடுத்த போது நோய்க்கும் இடம் கிடைத்தது.477- ஐயம் நம்மை அரவணைத்த போது நம்பிக்கை விலகிப் போனது.478- முயற்சி உறுதி அணிகலன் ஆனால் தளர்ச்சி தானாக மறையும்.
33-துறவு பூண்டு சென்றவன் நீயே. துதித்து போற்றுபவன் நீயே!உறவு துறந்து தனித்தவன் நீயே! தனித்து சாதித்தவன் நீயே !மறம் விளைந்த மண் நீயே ! மனித பண்பும் நீயே! வறம் போக்கி காப்பவன் நீயே ! வாழ வைப்பவன் நீயே!
29-பன்னிரு கரம் கொண்டவன் நீயே! பக்தரை காப்பவன் நீயே! மீன் விழியாள் மகன் நீயே! மின்னும் மகன் நீயே! முன் வினை தீர்ப்பவன் நீயே! முக்தி கொடுப்பவன் நீயே !துன்பம் துரத்தும் தூயவன் நீயே ! துணிவு தருபவன் நீயே!
28-ஆறு முகம்கொண்டவன் நீயே! ஆதரவு கரமும் நீயே! தூறு செய்து வென்றவன் நீயே ! தூய்மை மனத்தான் நீயே !குறு நடை கொண்டவன் நீயே ! குறிஞ்சி தலைவன் நீயே !வீறு கொண்டு எழுந்தவன் நீயே! வீனர்களை அழித்தவன் நீயே!
419-மன்னிப்பு என்பது தெய்வ குணம் மறக்க மறப்பது இழிகுணம். 420-காலம் அறிந்து செயல் வேண்டும் குணமறிந்து கேட்க வேண்டும். 421-பார்வை முன்னோர்க்கிச் செல்லும் போது பாதம் ஏன் பின்னோக்க? 422-வாழ்க்கை என்பது நம் கையில் வழியாய் வாழ்வது திறமை. 423-விழுகின்ற போதெல்லாம் வீரமுடன் எழு எழுகின்ற போதெல்லாம் முயற்சி. 424-அகம் மலர முகம் மலரும் புறம் மலர உழை
24-பச்சைச் செடியின் பசுமை நீயே! உச்சி வெயிலும் நீயே! கச்சை செய்யும் தலைவன் நீயே! கருணை காட்டுபவன் நீயே! உச்சத்தில் இருக்கும் இறைவன் நீயே! ஊக்கம் தருபவன் நீயே !அச்சம் தீர்த்து அருள்பவன் நீயே! ஆபத்தில் உதவுபவன் நீயே!
22-காவடி பிரியனே முருகா உன் காலடி பற்றினேன் முருகா !பாவடி தந்தாய் முருகா உன் பாதம் பணிவேன் முருகா!நாவடி வந்து முருகா நல்ல தமிழ் தருவாய் முருகா !சேவடி பற்ற முருகா சேமம் தந்து காப்பாய் முருகா!
மகளிர் சிறப்பு கட்டுரை திங்கள் தோறும் படித்து பயனடையுங்கள்.மகப்பேரின் மகத்துவம். ஆசியுரை கவிஞர் ச. மல்லிகா தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பல படைப்புகளை தமிழர்களுக்கு தந்துள்ளார். தமிழில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றதோடு வேறு பல பட்டங்களையும், விருதுகளையும், பெற்றுள்ளார். அவர்களுடைய தமிழ் இலக்கியப் பணி மிக பல எழுத்து வடிவாக மட்டுமல்லாமல், வானொலி, தொலைக்காட்சி, பட்டிமன்றத்தில் தெளிவான கருத்துக்களை பரிமாறுதல் செய்வதில் சிறந்த வல்லுனர் ஆவார். அவர்களது தமிழ் இலக்கியப் பணிகள் மற்றொரு படைப்பாக வெளிவர உள்ள “மகப்பேரின் மகத்துவம்” அவர்களது சமூக படைப்பின் மற்றொரு மைல்கல் ஆகும். ஏனைய படைப்புகள் போல இப்படைப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. இப்புத்தகம் பெண்கள் சமூகத்திற்கு மிகவும் பயன் தரக்கூடிய நூலாக அமையும். இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் கருத்தரித்தல் முதல் பிரசவத்திற்கு பின்பும் பிறந்த குழந்தை பராமரிப்பு அதற்கு செய்ய வேண்டிய பணிகளை பற்றியும்…