“முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்”!
பொருள் :-
முருங்கை மரத்திலிருந்து பெரிய லாபம் எதுவும் ஈட்ட முடியாது. இதை விவசாயத்திற்கு நட்டு வளர்த்தால் வெறும் கையோடு தான் போகவேண்டும்.
உண்மையான பொருள் :-
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய் இவைகளை தொடர்ந்து உண்பவர்களுக்கு உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் அதிகம் கிடைப்பதால், எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. வயதான காலத்தில் ஏற்படும் கூன் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இது பயன்படுகிறது. இதன் காரணமாக முருங்கை நட்டவன் கைகளில் தடி போன்றவை ஊன்றாமல் வெறுங்கையோடு நடப்பான். என்பது உண்மையான பொருள்.