84-பெரியாரைத்
துணைகொள்

ராமு ஒரு கட்டிட தொழிலாளி.

சிறுவயதிலேயே தந்தையர் இறந்து விட்டார். அம்மா வீட்டு வேலைகள் செய்து படிக்க வைத்தாள்.

வீட்டுக்கு பக்கத்தில் இன்ஜினியர் குடியிருந்தார்.

ராமுவை கூப்பிட்டு வேலைகள் கொடுப்பார்.

ராமு மிகச் சரியாக செய்து முடிப்பான்.

இப்படி போய் கொண்டு இருந்தது.

ஒரு நாள் ராமு என்னுடன் வேலைக்கு வருகிறாயா? என்றார் இன்ஜினியர் பாபு.

சரி சார் என்ற ராமு அவருடன் சென்றான்.

கட்டிட வேலைகளை பாபு சொல்வது போல் ராமு மிக நேர்த்தியாக செய்தான்.

படிப்படியாக எல்லா நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டான் ராமு.

பாபு ஒரு நாள் ராமுவை வீட்டிற்கு அழைத்தார்.

ராமுவும் உடனே வந்து நின்றான்.

ராமு ஒரு புதிய கட்டிட வேலை வந்திருக்கிறது. அதை நீ தான் முழுமையாகச் செய்யப் போகிறாய் என்றவர் முன் பணத்தை கையில் கொடுத்தார் பாபு.

சரி சார் என்ற ராமு காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டு முன்பணத்தைப் பெற்றுக் கொண்டான்.

பெரியவர்கள் துணையுடன் வாழ்ந்தால், ஒரு நாள் வெற்றி பெறலாம் என்பதை சிறுவயதில் படித்த “பெரியாரைத் துணை கொள்”என்ற ஔவையாரின் வரிகள் நினைவுக்கு வந்தது ராமுவிற்கு…

ராமு மகிழ்ச்சியுடன் அம்மாவைப் பார்க்க புறப்பட்டான்.

Share.

Leave A Reply