85-பையலோ டிணங்கேல்

பாலும் முன் வரிசையில் இருந்தான். மற்ற மாணவர்களைப் போல் பேசி அரட்டை அடிக்க முடியாது.

அவன் கவனம் எல்லாம் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது அவன் ஆழ்மனதின் எண்ணம்.

அவன் அப்பா சாதாரண தொழிலாளி. அவர் படும் கஷ்டத்திற்கு பாலுவை படிக்க வைப்பது பெரிய விசயம்.

இது தெரிந்தும் சில மாணவர்கள் அவனைப் படிக்க விடாமல் வம்புக்கு இழுப்பார்கள்.

அவர்களிடம் மோதினால் நமக்கு நல்லது அல்ல என்பதை நன்கு உணர்ந்து இருந்தான் பாலு.

  ஏதோ ஒரு காரணம் சொல்லி அந்த இடத்தை விட்டு போய்விடுவான் பாலு.

“பையலோ டிணங்கேல்” என்ற புலவர் ஔவையார் அமுதமொழி போல் அவர்களுடன் சேராமல் ஒதுங்கிப் போய் விடுவான் பாலு.

Share.

Leave A Reply