சித்தவைத்தியம் -சிக்கன மருத்துவம்
————————————–
கவிஞர் ச.மல்லிகா
———————————
ஏகாரம் -போல்ட்
மண் ஆசை போல்ட்
இவர்கள் ஒரு வகை. சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மனை வாங்குவதிலும் நிலம் வாங்குவதிலும் செலவு செய்து கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.
வரவுக்கு மேல் செலவு இருந்து கொண்டே இருப்பதால் ஒருவித படபடப்பு மன அமைதியின்மை இருந்து கொண்டே இருக்கும் .
மன அமைதி இன்றி இருக்கும்போது உணவு உட்கொள்வது பிடிக்காமல் சர்வகாலமும் பணம் சேர்ப்பதிலும், நிலம் வாங்கியதற்கும் கொடுத்து ஒரு வித திருப்தி இன்றி மனம் துன்பம், நெஞ்சுவலி ,சர்க்கரை, இரத்தக் கொதிப்பு இப்படி நோய்களும் ஒட்டிக்கொண்டு சந்தோசம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
பெண் ஆசை உள்ளவர்கள்
இவர்கள் சம்பாதிக்கும் பணத்தைக் கொடுத்து பெண்ணை அனுபவிப்பதில் காலம் கடத்துவதால், இவர்கள் மனதில் ஒரு வித குற்ற உணர்வு பயம் இருந்து கொண்டே இருக்கும்.
இவர்கள் பணம் கொடுத்து நோயை சம்பாதிப்பவர்கள். சம்பாதிக்கும் பணம் மட்டும் கரைவது இல்லை .உடல் நலனும் கெட்டுப் போவது தான் உண்மை.
காலம் கடந்து உணர்ந்து வருந்தி விழித்துக் கொள்வதற்குள் காலம் கடந்து போய் இருக்கும்.பின் வருந்தி பயன் என்ன ?
எயிட்ஸ் போன்ற ஆள்கொல்லி நோய் தாக்கி ஆயுள் முடியும் வரை துன்பப்பட நேரும் .
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைக்கு ஆசைப்பட்டு ஒவ்வொரு பிணி தாக்கி துன்பப்பட நேர்கிறது .இவற்றைப் போக்க என்ன வழி பார்ப்போம்.
நமது மூதாதையர்கள் சிறு வயதில் இருந்தே ஆன்மீக வழியில் அழைத்துச் செல்வார்கள்.நல்ல நீதிக்கதைகள் சொல்லி சொல்லி கதை போக்கில் நல்ல நெறிகளை எடுத்துச் சொல்வார்கள்.
மனதை இறைவன் திருவடியை வணங்குவதிலும் நல்ல நீதிகளை மனம் தெரிந்து கொள்ளும் போதும் ,மனவடக்கம் சிறுவயதில் இருந்தே வந்து விடும்.
மனக் கட்டுப்பாடு வளர ………. வளர ஆசை அளவாக இருக்கும். எந்த தீய வழியும் மனதை எதுவும் செய்யாது. அந்த பக்குவத்தை தருவது ஆன்மீக வழிதான்.
அதை முறையாக சிறு வயதில் இருந்தே அதன் வழி நடந்தால் நன்மை என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லும்.தீமை என்ற கொடிய நோய் நம்மை தீண்டாது.
உண்மையாக இருக்கும் போது தன்னம்பிக்கை வரும். இலக்கு நோக்கி பயனப்பட வைக்கும்.அந்த பயணத்தில் முள் இருக்காது .மலர்கள் இருக்கும். பயணம் சுகமாகும்.
நமது இந்தியாவில் தான் கோவில்கள் அதிகம்.அதைச்சுற்றி வரும்போது உடல் ஆரோக்கியம்.நடைப்பயிற்சி.உள்ளத்தின் ஆரோக்கியம் சுவாமி தரிசனம்.பிரசாதம் உடல் நலனைக் காக்கும் உணவு, இலை, தீர்த்தம் கொடுத்து மக்கள் நலன் காப்பதும் கோவில்களின் பணியாகக் கூட இருந்து வருகிறது.
சுகாதாரம்
வீட்டுக் குப்பையை மூலையிலே
ஒதுக்கக் கூடாது
தெருவிலே குப்பையை நாமும்
போடக்கூடாது
வீதியிலே எச்சிலை நாம்
உமிழக் கூடாது
தெரு ஓரம் கழிப்பிடமாய்
ஆக்கக் கூடாது
கழிவு நீரை தேக்கி, நாம்
வைக்கக் கூடாது
கழிவுப் பொருளையும் சேர்த்து
வைக்கக் கூடாது.
சுத்தமாக வைத்துக் கொண்டால்
சுகாதாரம் கிடைக்கும்
ஈ, கொசு வராமல்
தடுக்கவும் செய்யும் .