ஆலமரம்
11-உளிக்கு பயர்ந்த கல் படிக்கல்லாய் பாதையில் பணிந்த கல் சிலையாய்.
12- காற்றடித்தால் பறக்கும் பஞ்சு
கலங்காமல் நிற்கும் சந்தனம்
உழைப்பால் உயர்வு.
13- விளைச்சல் மண் விளைந்தது நெல் விதைப்பதே அறுவடை.
14- உடைகள் பட்ட கறை
உடனே துவைக்க போனது
ஒழுக்கமின்மை?
15- சிறுக சிறுக சேமிக்கும் தேனி
சேர்த்தை எடுக்கும் மனிதன்
அரசியல்வாதி.
16- வானத்தில் பறவை பறக்குது
தேவைக்கு உணவை உண்ணுது
சேமிக்க அது மறக்குது.
17- வரிசை வரிசையாய் அணிவகுப்பு
கடுமையாய் உடல் உழைப்பு
சேமிக்க சொல்லுது எறும்பு.
18-செடி மரமாகி
உதிர்ந்து உரமாய்
முதியோர் இல்லம்.
19- சுத்த காற்று உள்ளே
அசுத்த காற்று வெளியே
காற்று போல் உயிர்.
20- சோதனை என்பது துன்பமில்லை
பக்குவப் படுத்தும் ஊட்டச்சத்து
ஆற்றல் வெளிப்படும்.