ஆலமரம்

31- வளர்த்த கடா முட்டியது

வளர்த்த யானை கொன்றது

முதியோர் இல்லத்தில் பெற்றோர்.


32- மரம் நிறைந்த கனிகள்

மாசு நிறைந்தது

வீடு நிறைய பிள்ளைகள்.


33- மழை வருகை

மண்வாசனை

உழவனின் சந்தோசம்.


34- நிலவுப் பெண் வராததால்

நட்சத்திர தோழிகளும் வரவில்லை

அடை மழை.


35- இயற்கை வெளிச்சத்தில்

குடும்பத்தினர் பேசிக்கொண்டு

மின்தடை.


36- குளிர்ந்தது வீடு

குளிர்சாதனம் இல்லாமல்

மழையின் வரவால்.


37- பேயாட்டம் ஆடியது

மரங்கள்

புயல் சின்னம்.


38- தண்ணீரில் மிதந்தது

வீடு

மழைக்காலம்.


39- கிளையில் பறவை

பறவை கூட்டம் தாக்கியது

வேற்றுப் பறவை.


40- அன்பு பாதைக்கு

அழைத்துச் சென்றது

திருக்குறள்.     

Share.

Leave A Reply