ஆலமரம்
21- பறவைகள் பலவிதம் திறமைகள் பலவிதம் செய்வதே தனித்திறன்.
22- முதிர்ந்த நெல்மணிகள் தலை குனிந்து
பதர்மணிகள் நிமிர்ந்து கூத்தாடும்
அடக்கமுடன் சான்றோர்.
23- பனை தன்னையே தானமாக்குகிறது
எட்டி மரம் எதற்கும் உதவாது
உதவியாய் மனிதன்.
24- சுதந்திரமாய் பட்டம் பாதியில் அருந்து
சுதந்திரக் கொடி பத்திரமாய் கம்பத்தில்
கட்டுப்பாடே சுதந்திரம்.
25- பிஞ்சில் வளையும் செடி
மரமானால் முறியும்
இளமையில் கல்.
26- மேக கூட்டம் வானில்
மின்னல் இடி இடையில்
மழையின் வருகை.
27- அன்பே கடவுள்
அவன் தாள்
பணிவதே பக்தி.
28- மாடித்தோட்டம் இலை
மறைவில் பிரசவம்
பூனைக்குட்டி.
29- கார் மேகம் கண்டு
தோகை விரித்தாடும் மயில்
தென்னை கீற்று ஆடியது.
30- நீர் சுமந்த மேகம்
கருமேகமாய் நகர்ந்தது
சுமை தூக்கும் தொழிலாளி.
மலரும்.