செந்தமிழ் வாணி
டாக்டர் ச.மல்லிகா எழுதும்…..
ஹைக்கூ கவிதைகள்    
        கண்ணாடி

               பணி

பிணங்களைத் தூக்கித் தூக்கி

பிணமாகி விட்டதால்

கணவனின் பணிக்கு மனைவி.


           காக்கா

பணம் உள்ளவனிடம்

ஒட்டுண்ணியாய் 

காக்காய்கள்.

 
            மரங்கள்

மழையில் நனைந்தது மரங்கள்

குதித்து குதித்து துவட்டியது

பறவைகள்.


             நிலா

இரவில் விளக்காய்

ஒளி கொடுத்தது

பௌர்ணமி நிலா.


         நட்சத்திரம்

வான் நிலவுக்கு

தோழிப் பெண்கள்

நட்சத்திரக் கூட்டம்.


         கண்ணகி

வீட்டிற்கு விளக்கு ஏற்றியவள்

ஊரைக் கொளுத்தினாள்

கண்ணகி.


                  பனி

கன்னிப் பெண்களின்

இரவுக் குளியல்

பனித்துளி.   


            இரும்பு

காந்த துண்டுக்கு

நாட்டியம் ஆடுகிறது

இரும்பு துகள்கள்.


                    பூ

வாடாத பூக்கள்

வண்ண வண்ணமாய்

செயற்கை பூ


         குழந்தை

கண்மூடிக்  காதல்

வயிற்றில் குழந்தை

பிறப்பு குப்பைத் தொட்டி

                               மலரும். 

Share.

Leave A Reply