செந்தமிழ் வாணி 
டாக்டர் ச. மல்லிகாவின்
ஹைக்கூ கவிதைகள்    
         கண்ணாடி

            எந்திரம்

தன்னம்பிக்கை இல்லா மனிதன்
எரிபொருள் இல்லா எந்திரம்
இழப்பு அவன் இருப்பிடம்.


              உறுதி

வயலுக்கு உரம் வாழ்விற்கு நம்பிக்கை  ஜெயிப்பது உறுதி.

      தீர்க்கதரிசனம்

கண்ணுக்கு குறை
தூரப் பார்வை
நிறை தீர்க்கதரிசனம்.


         அமைதி

உழைப்பின் கடுமை படிகளின்  உயர்வு அடைவது அமைதி.

              வித்து

மனத்  தூய்மை

வலிமையின்  ஊற்று நேர்மைக்கு வித்து.

தியாகம்

தனக்காக சேர்ப்பது தன்னலம்!
பிறருக்காக உழைப்பதே
தியாகம்
          
           தடுமாற்றம்

எண்ணங்கள் நல்லதில்லை!
விசுவாசம் இல்லவே இல்லை!
நிலை தடுமாற்றமாய் 

             பேசுதல்

இடமறிந்து பேச வேண்டும்
சுவைபட பேச வேண்டும் வெற்றிக்கு வழி.

               அன்பு

சொல் அம்பானால்

செயல் குருதியாகும்

அன்பே  ஆனந்தம்.

           சோதனை

சோதனை என்பது சோர்வடைய அல்ல உறுதியாக்க  

                            தொடரும்.   

Share.

Leave A Reply