11. மீன்
ஆசைப் பட்டு
மோசம் போனது
தூண்டிலில் மீன்.
12. தானம்
மண்ணில் பிறந்து
மண்ணில் மக்காதது
உடல் தானம்.
13. புகை
மாசுபடுகிறது
இயந்திரம்
புகை பிடிப்பதால்.
14. சிறுவர் தொழில்
பட்டாசு பதபதப்பாய்
வெடிக்காமல் போனது
சிறுவனின் வியர்வை.
15. வரவு
சிரிக்கும் பூக்கள்
சங்கீதப் பறவைகள்
காலை வரவு.
16. ஆர்வம்
அதிர்ஷ்டம் கானல்நீர்
நெருங்க விலகும்
ஆர்வமே சக்தி.
17. மழை
சூழ்நிலை நிர்ப்பந்தம் ஆற்றல்
சூழ்ச்சியின் நிர்பந்தம் குழப்பம்
வானத்து மழை.
18.தொட்டில் குழந்தை
கள்ளிப் பாலுக்கு
தப்பிய பெண்சிசு
தொட்டில் குழந்தை.
19. கனவு
நீண்ட கனவு
நிண்டு போனது
உறக்கம் களைந்ததால்.
20. அலை
காற்ற அடித்ததால்
கரையை தொட்டது
கடல் அலை.
மலரும்.