11-பாய்ந்து ஓடியது

பதுங்கிக் கொண்டது

நண்டு.


12-கல்லறை மாளிகை

கணவன் கட்டியது

தாஜ்மஹால்.


13-உடலுக்கு முதுகெலும்பு

உயர்வுக்கு முயற்சி

இறுதியே  வெற்றி.


14-இரவு குளியல்

துவட்டாத தலை

புல்வெளி நீர்.


15-பச்சை மரம் அழித்து
பல மாடி கட்டிடம்
நகர வளர்ச்சி. 


16-ஆசை அதிகமானால்

அன்பு புதைக்கப்படும்

அழிவு பிறந்துவிடும்.


17-பட்டுப்போன துளசி செடி நம்பிக்கையில் நீர்வாக்க துளிர்த்தது பலசெடி


18-வெட்ட வெட்ட
வளர்ந்தது மரம்
முயற்சி


19-பாய்ந்து பிடிக்கும் புலி கவ்விப் பிடிக்கும்
குட்டிகளை
தாய்மை


20-குழலில் வருவது காற்று புல்லாங்குழலில் வருவது
துவார இசை

                               மலரும்

Share.

Leave A Reply