52- சையெனத் திரியேல்
ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு இரண்டு குணம் உண்டு நல்ல குணம் கெட்ட குணம் என்று இறைவன் படைத்து விட்டான்.
நல்ல சிந்தனை நேர்மையாக நடப்பவர் ஒழுக்கம் மிக்கவர்களை, ஊருக்கு நல்லது செய்பவர்களைப் பார்த்து கையெடுத்து வணங்கும் மக்கள்.
தீய செயல் செய்பவர்களைக் கண்டால் விலகிச் சென்று விடுவார்கள்.
மது குடிப்பவர், புகை பிடிப்பவர், பொய் சொல்பவர், திருடுபவர், பிறருக்கு கெடுதல் செய்பவரைக் கண்டு இவரா என்று விலகிச் சென்று விடுவார்கள்.
இப்படிப் பட்ட மனிதர்களை மதிக்கவும் மாட்டார்கள். கேசவன் நல்ல வேலை, சம்பளம் என இருந்தும் அவனுடைய தீய குணம் ஒருவரைப் பற்றி ஒருவரிடம் மாற்றி… மாற்றி பேசி சண்டை போட வைத்து விடுவான்.
உயர் அதிகாரியிடம் திரித்து பேசி மாட்டி விட்டு விடுவான்.
கேசவன் குணம் தெரிந்த எல்லோரும் அவனைக் கண்டாலே பயத்தில் இந்தா வந்து விடுகிறேன் என ஓடி விடுவார்கள்.
இதைத்தான் புலவர் ஔவையாரும் பிறர் கேவலமாகப் பேசும்படி நீ நடந்து கொள்ளக் கூடாது என்பதை “சையெனத் திரியேல்” என்று கூறி இருக்கிறார்.
