44- சக்கர நெறிநில்
தீபா தன் மகள் சுபாவிற்கு ‘ஆத்திசூடி’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அம்மா சொல்லிக் கொடுப்பதை சுபாவம் திரும்பச் சொல்லிக் கொண்டு வந்தாள்.
‘சக்கர நெறிநில்’ என்று அம்மா சொன்னதை சொன்ன சுபா!
அம்மா! ‘சக்கரநெறிநில்’ என்றால் என்ன? எனக் கேட்டாள் சுபா.
சுபா! என்ற தீபா, சொல்ல ஆரம்பித்தாள். கொரனா என்ற கொடிய நோய் வந்தபோது…! மக்களை காப்பாற்ற அரசாங்கம் பல தடை உத்தரவுகளை போட்டது.
அரசாங்கம் அறிவித்ததை ஏற்று மக்களும் தடை உத்தரவுப்படி நடந்து கொண்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது.
இது போன்ற சூழ்நிலைகளில் அரசாங்கம் போடும் உத்தரவுகளை கடைபிடிப்பது தான் ‘சர்க்கர நெறிநில்’ என்பதன் பொருள் என்றாள் தீபா.
புரிந்தது அம்மா!என்று உரத்த குரலில் சொன்னாள் சுபா.
ஔவையார் சொன்ன தன் பொருளைக் கேட்டு தெரிந்து கொண்டு மகள் படிக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட தீபா மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தாள்.
