அன்பின் சிகரம் ஆசிரியர்
வாழ்க்கை என்னும் வசந்தம் மலர
வரவு என்ற அறிவைக் கொடுத்து
பண்பு என்ற பூமி உழுது படிப்பு என்ற விதையை நட்டு
சீர்மை என்னும் நீர் ஊற்றி சீவன் போன்று செடி வளர்த்து
சினம் என்னும் களை நீக்கி சீரியர் ஆக்கும் ஆசிரியர் பணியில்
அன்னையின் அன்பு தந்தையின் பாசம்
அன்பின் சிகரம் ஆசிரியர் பாசம்
கருணை உள்ளம் கலங்கரை விளக்கு
கடமை வேகம் சிந்தனை ஊற்று
இசையும், இன்பமும் கற்றுக்கொடுத்து
இசை மேதை ஆக்கி வடித்த தந்தையை வாழ்த்தும் பசுவின் கன்று
தடம் பதிப்பபோம் ஆசிரியரை வணங்கி.