தேவையானவை :-
1. எலுமிச்சைச் சாறு
2. முட்டை வெள்ளைக்கரு
3. தேன்
ஒரு சிறிய கிண்ணத்தில் 4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு முட்டை வெள்ளைக்கரு மற்றும் 4 டீ ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி இரண்டு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் சருமத்தில் உள்ள தழும்புகள் சீக்கிரம் மறைந்துவிடும்.