265 -பஞ்ச பூதங்கள் உலகிற்கு சொந்தம் புலனடக்கம் மனிதருக்கு சொந்தம்.

266- அன்பை நீ பிறருக்குக் கொடு பத்தாய் திரும்பி வரும்.

267- கடலின் நீரோட்டம் போன்றது சடங்கு ஆயிரம் அர்த்தங்கள்  ஆழத்தில்.

268- பணமும் பகட்டும் வெட்கப் படும் பாசம் வெட்கம் அறியா!

269-உபதேசம் செய்ய ஓராயிரம் பேர் உண்மையாய் நடக்க ஒதுங்குவர்.

270-படிப்பு என்பது கல்லூரியுடன் முடியாது காலமெல்லாம் தொடர்வதே படிப்பு.

Share.

Leave A Reply