20-தந்தை தாய்பேண்

தாத்தா படுத்த படுக்கையாக இருக்கிறார்.

அவருக்கு படுத்துக் கொண்டே இருந்ததால் புண் வந்துவிட்டது.

பேரன், மகன், மருமகள் என எல்லோரும் பார்த்துக் கொண்டார்கள்.

வசதி எல்லாம் இல்லாதவர்கள் தான். ஆனால் அந்த குடும்பத்தில் அன்பு நிறைந்திருந்தது.

படுத்து இருந்த நிலையிலும் கவனித்து பார்த்துக் கொண்ட பேரனை கண்கலங்க பார்க்கிறார் தாத்தா.

பேச முடியாத நிலையிலும். கைகளை உயர்த்தி நல்லா இருக்க வேண்டும் என்று ஆசி வழங்குகிறார்.மகன், மருமகள் என எல்லோரையும் வாழ்த்துகிறார்.

இந்த அன்பால் தானே உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

தாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்து. குழந்தையை வலி பொறுத்து பெற்று தன் உதிரத்தை பாலாக்கி கொடுத்து வளர்க்கிறாள்.

வளரும் குழந்தையை தன் தோள்களில் சுமந்து தந்தை இந்த உலகத்தை காட்டுகிறார்.

தங்களை விட தங்கள் குழந்தை படிப்பிலும், வேலையிலும், மற்றவர் முன்னிலையிலும் உயர வேண்டும் என தாயும், தந்தையும் பேணி வளர்க்கிறார்கள்.

திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்து வைத்து….

பேரன்,பேத்தியெனப் பார்த்து மகிழ்கிறார்கள். தாத்தா, பாட்டி இருவரும் சிறு குழந்தை போல் விளையாண்டு தனது முதுமையை மறைக்கிறார்கள்.

முதுமை காலத்தில் நோய்,வாய் பட்டு படுக்கும் நிலையில் இருக்கும் தாய், தந்தையை பாதுகாக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதை “தந்தை தாய் பேண்” என்கிறார் ஔவையார்.

Share.

Leave A Reply