தேவசந்திரன் எழுதும் புதிய தொடர்கதை
காலை நேரம் சி. ஐ. டி. ரகுவும் அவர் மகன் பாபுவும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது வீட்டின் உள்ளே டெலிபோன் அலறியது!
ரகு ஃபோனை எடுத்தார். எஸ்!… ரகு ஹியர்!!.. என்ன?
அப்படியா? நீங்க யார்? எங்கே இருந்து பேசுகிறீர்கள்?
அப்படியும் இருக்குமோ? தொலைபேசியை வைத்து விட்டார்கள்.
போலீஸ் நிலையம். வெளிநாடு செல்லும் விமானம் புறப்பட இன்னும் அரை மணி நேரம் உள்ளது!
சார்! வண்டி ரெடி!!ம்…. கிளம்பு!
ஜீப் விரைந்தது, விமான தளத்தை நோக்கி…
அதே நேரத்தில் ரோட்டில் காற்றை கிழித்துக்கொண்டு ஒரு கார் வந்து கொண்டிருந்தது!
ரோடு ஓரத்தில் இருந்த டெலிபோன் பூத்தில் இருந்து சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டே ஒருவன் வெளியே வந்தான்!
ரோட்டை கடக்க முயன்றான்! அப்பொழுது…
விரைந்து வந்த கார், அவனைக் கண்டதும் உரசிக் கொண்டு நின்றது!
அவன் பயத்துடன் ஓட முயன்றான்!
காரில் இருந்த துப்பாக்கி ஏந்திய கை அவனை நோக்கி திரும்பியது.
துப்பாக்கி சத்தமின்றி குண்டுகளை கக்கியது!
ஆ….! எனக்கத்தியபடி கீழே விழுந்தான்.
பின் கார் விரைந்து மறைந்தது.
விமான தளத்தின் பார்சல் பகுதி…
சார்! இந்த பார்சல்களையும் சேர்த்து விட வேண்டும்.
நேரம் ஆகிவிட்டதே!
ப்ளீஸ்!.. ம்… சீக்கிரம் ஆகட்டும்!
பார்சல் கொண்டு வந்தவன் தன் ஆட்களுக்கு சைகை கட்டினான்!
வந்த ஆட்கள் சுறுசுறுப்படைந்தனர்.
பார்சல்கள் அப்படியும், இப்படியும் கை மாறின!
விமான தளத்தின் அவசர வழி மூலம் உள்ளே நுழைந்தது போலீஸ் ஜீப்!
இன்ஸ்பெக்டர் ரகு இறங்கி அதிகாரிகள் இருந்த அறைக்குள் நுழைந்தார்!
பிரயாணிகள் மன்னிக்கவும், எதிர்பாராத தடங்கலினால் விமானம் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்!…
விமானத்தின் பார்சல் பகுதி… அந்த பொம்மை பாக்கிங் மட்டும் சோதனை செய்ய வேண்டும்!..
மிகவும் நாணயமான கம்பெனி ஆச்சே சார்!… வாடிக்கையாளர்கள் கூட!!
புகார் வந்திருக்கிறது. சோதனை செய்வது எங்கள் கடமை!…
தொடரும்.