தேவ சந்திரன் எழுதும் தொடர் கதை

உடைந்த கப்பல்

அதில்…

இன்ஸ்பெக்டருக்கு,

பூபதி மனைவி மறையவில்லை, மறைக்கப்பட்டுள்ள. விளக்கம் உடைந்த கப்பலில்…
         உண்மை விளம்பி என்று இருந்தது.

இன்ஸ்பெக்டர் அந்த கடிதத்தை பத்திரப்படுத்தினார்.

பிறகு ஏட்டு, கான்ஸ்டபிள் களுடன், உடைந்த கப்பல், பூபதி பற்றிய விவரங்களை ஆராய தொடங்கினார்.

அன்று மாலை…

சாதாரண உடையில் உடைந்த கப்பலைப் பார்க்கச் சென்றார் இன்ஸ்பெக்டர் ரவி.

சிப்பந்திகள் சிலரை இன்ஸ்பெக்டர் நோக்கினார்.

அவர்களில் ஒருவன் முகம்?  இவன் ஏற்கனவே இரண்டு முறை அபின் கடத்தல் கேசில் உள்ளே போனவனாச்சே!

உள்ளே போனவன் வெளியே வரவில்லை.
இந்த வழி தவிர வேறு வழி இருக்கிறது போல் தெரிகிறதே!

இந்தக் கப்பலை கூட பூபதி தான் வாங்கி பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். 

கடிதத்தின் வாசகங்கள் உண்மையைத்தான் சொல்கிறதோ! ரவி மெல்ல நகர்ந்தார்.

கப்பலின் அடிப்பகுதியில் அண்ணே! இன்ஸ்பெக்டர் ரவி கப்பலில் சந்தேகப்படுகிற மாதிரி தெரிகிறது. என்றான் வேலை பார்க்கும் சிப்பந்தி.

அப்படியா! கடைசியா எப்போது பார்த்தாய்! என்றான் மற்றொருவன்.

இப்பத்தான்! நம்ம கப்பலைச் சுற்றி சுற்றி வருகிறார்!

சரி முடிச்சிட வேண்டியதுதான்.

ஆமாம் அண்ணே! இல்லாட்டி நம்மை முடிச்சுடுவான் என்றான் அந்த சிப்பந்தி.

போடா முட்டாள்! நம்மை முடிக்க ஆண்டவனே யோசிக்கணும் இது சுண்டைக்காய் என்றான்.

பாஸ்கிட்டே சொல்லிவிட்டு அவர் ‘ஓகே’] என்றால் முடிச்சிட வேண்டியதுதான்.

சரி அண்ணே என்றான். சிப்பந்தி.

தனியா அறைக்குள் சென்றான், மொட்டைத் தலையன். அது ஒரு மின்சார சாதனம் உள்ள அறை.

பீம்… பீம்… காலிங் ரெடி…

வணக்கம். பாஸ்!

என்ன டைகர். இந்த நேரத்தில்…. 

இன்ஸ்பெக்டர் ரவி நம் கப்பலை சந்தேகப்படுகிறார்!

சமாதானம் பண்ணிப்பார் நம் வழியில் குறுக்கிடாமல் இருக்க! இன்ஸ்பெக்டரிடம்  பேசி இரண்டில் ஒன்றை மூடி. சம்மதிக்கவில்லை என்றால் வழக்கமான பரிசை கொடு! என்றார்.

உத்தரவு பாஸ்! என்றான் மொட்டை தலையன் டைகர். 

‘கிளிக்’என்ற சப்தத்துடன் சுவரில் ஒரு இடைவெளி வர, அதிலிருந்து கட்டாக பணம் வருகிறது. 

டைகர் இந்த ரூபாயை கையில் வைத்துக் கொள் என்றார் பாஸ்.

எஸ் பாஸ் என்றான் டைகர்.

அதே நேரத்தில், கடலின் மற்றொரு பகுதியில்… தனிப்பட்டகில் அமர்ந்தபடி பைனோக்குலர் மூலம் கடல் பகுதியை பார்த்தார் இன்ஸ்பெக்டர் ரவி.

அங்கே, தொலைவில் சிறிய வெளிநாட்டுக்
கப்பல். அதிலிருந்து “மினுக்…மினுக்”  என்ற ஒளி! வந்து கொண்டிருந்தது.

Share.

Leave A Reply