தேவ சந்திரன் எழுதும் தொடர் கதை

சிக்னல் கிடைத்தவுடன் உடைந்த கப்பலின் வயிற்றுப் பகுதியில் இருந்து சிறிய படகுகள் கிளம்பின!

படகுகளில் போதை தரும் கஞ்சாவும், இளம் பெண்களும் நிறைந்திருந்தனர்!

திடீர் என்று எல்லோரும் கூச்சலிட்டனர்! ஐயோ ஆ…ஆ போலீஸ்…. என்று…

போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

படகில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட்டனர். எல்லோரும் கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.

கரையில் பூபதி கையில் விலங்குடன் நின்றிருந்தார். அருகில் லதா அழுதபடி நின்று இருந்தாள்.

கைது செய்யப்பட்ட பெண்கள் எல்லோரும் பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போலீஸ் நிலையத்தில்! மிஸ்டர் பூபதி உங்க மனைவியை ஏன் மறைச்சீங்க!

பூபதி கடந்த கால நிகழ்சிகளை கூறினார். அன்று ஒரு நாள்…! கணவனின் புத்தக அறைக்குள் மீனா நுழைந்தாள். அங்கே…

டைகர், ஆழகான பெண்கள் நல்ல விலைக்கு போகிறார்கள். நம் ஆட்களை பரவலாக அனுப்பு! என்றார் பூபதி.

எஸ் பாஸ்!

இந்த உடைந்த கப்பலை மாற்றி கோட்டையாக ஆக்க வேண்டும்.

போதும் நிறுத்துங்கள்! நமக்கு உள்ள சொத்து இன்னும் இரண்டு தலைமுறைக்கு வருமே என்றால் மீனா.

அடி பைத்தியக்காரி! மூன்றாவது தலைமுறை கஷ்டப்படக் கூடாது பார்!

அதற்காக இப்படிப்பட்ட பாவக்காரியமா? செய்வது என்றால்  மீனா.

பாவமாவது, புண்ணியமாவது பேசாமல் போ! என்றார் பூபதி.

உடனே, அருகில் உள்ள டெலிபோனை கையில் எடுத்து நம்பரை சுழற்றினாள் மீனா! ஹலோ போலீஸ் ஸ்டேஷனா!

ஏய்! நிறுத்து! என்ற பூபதி மீனா என் முதல் எதிரி நீதான்! உன்னை…

பூபதி, சுவரில் உள்ள பட்டனை அழுத்தினார்.  உடனே, பக்கத்தில் உள்ள கதவு தானாக திறந்து கொண்டது.

மீனா அந்த அறையில் தள்ளப்பட்டாள். போ! உள்ளே!  சுரங்க அறையில்… உனக்கு இனி சாகும் வரை இதுதான் இடம்!

இதுதான் சார் நடந்தது!எங்கே போலீசில் சொல்லி விடுவாளோ என்று பயந்து அடைத்து வைத்தேன்!

போலீஸ் சந்தேகப் படாமல் இருக்க காணாமல் போய்விட்டதாக புகார் செய்தேன்!

மீனாவை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ரவி வந்தார்.அவருக்கு கடத்தல் செய்வது தெரிந்து விட்டது. இனி வெளியில் விட்டால் ஆபத்து என்பதால் தான் அவரை கொன்றோம்.

  அப்போது கமிஷனரும், நவீனம் வந்தார்கள்.

நவீன்! உங்களது சேவை மகத்தானது. அக்கா, அத்தான் என்ற குடும்பப் பாசம் கூட உங்கள் கடமையை குலைக்கவில்லை.

கடமையும், சுயநல வெறியும் தான் காரணம் சார்!

பூபதி  போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.

லதாவும், மீனாவும் குலுங்கி குலுங்கி அழுதார்கள்.

நவீன் இருவரையும் ஆறுதலாக அழைத்துச் சென்றார்.

              முடிந்தது

Share.

Leave A Reply