தேவ சந்திரன் எழுதும் தொடர் கதை
காது வலிக்கிறது லதா! ஏதாவது மருந்து இருக்கிறதா?
இருங்கள்! பார்த்து வருகிறேன் என்றாள் லதா.
நவீன் பையில் இருந்த சிறிய கருவியை காதில் பொருத்திக் கொண்டான் அதில்…
சாப்பிட மாட்டேன் என்கிறார்கள்.
கட்டாயப்படுத்தி கொடு என்றார் பூபதி.
பாஸ்! போலீஸ் நடவடிக்கை பற்றி ஒன்றும் தெரியவில்லையே! டைகர்! போலிஸ் அமைதியாக இருப்பதால் ஆபத்து அதிகம் சற்று விழிப்பாக இரு!
கவனமாக நமது ஆட்கள் இருக்கிறார்கள். அதோடு, நேற்று கன்னிகுடா எக்ஸ்பிரசில் ஒரு சி.ஐ.டி வருவதாக தகவல் கிடைத்தது! ஆளை அமுக்கி விட்டாயா?
இல்லை பாஸ், தகவல் தாமதமாக கிடைத்தது. ஆள் வந்த சுவடி தெரியவில்லை.
சரக்குகள் தயார் ஆகிறதா, டைகர்!
ஆமாம் பாஸ்! எல்லாம் ரெடி!
சரி!எச்சரிக்கையாக இருங்கள்! ஓவர். உரையாடல் முடிந்தது.
நவீன் சிரித்தபடியே காதில் உள்ள கருவியை எடுத்தான். என் வேலைகள் எல்லாம் சுலபமாக நடக்கின்றன! வலையை பக்குவமாக பிரிக்க வேண்டியதுதான்!
எந்த கோட்டையை பிடிக்க இந்த யோசனை இருந்தாங்க மருந்து! என நீட்டினால் லதா!
எல்லாம் இந்த கோட்டையை பிடிக்கத்தான் என்றான் நவீன்.
பூபதி திரும்பி வந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர்.
அக்காவை இன்றைக்கு கட்டாயப்படுத்தினால் கூட சாப்பிட மாட்டாங்களே! என்ன லதா?
என்ன? என நிமிர்ந்தார் பூபதி.
நீங்க ஏன் கவலைப்படுறீங்க! அக்கா வழக்கமாக இன்றைக்கு விரதம்! என்றான் நவீன்.
நாம் இப்போது சாப்பிட போகிறோம்! அதுதான் நினைவுக்கு வந்தது.
அப்பாடா! பயல் எதை எதையோ உளறி சற்று நேரத்தில் கலக்கி விட்டானே! என நினைத்தார் பூபதி.
மறுநாள் உடைந்த கப்பலில் உள்ளே பார்வையாளர்களாக மாற்று உடையில் சென்றனர்!
அதே நேரத்தில் நடுக்கடலில்…. வெளிநாட்டு கப்பலை இந்திய போலீஸ் படை சுற்றி வளைத்தது! வெளிநாட்டு கப்பல் சரணடைந்தது.
போலீஸ் அதிகாரிகள் உள்ளே சென்று அனைவரையும் கைது செய்தனர்.
வெளிநாட்டு கப்பல் மெல்ல கரையை நோக்கி நகர்ந்தது! கப்பலில் இருந்து ‘சிக்னல்’ கொடுத்தார்கள்!
பதில் ‘சிக்னல்’ உடைந்த கப்பலில் மேல் தளத்திலிருந்து கிளம்பியது!
தொடரும்