80-பீடு பெற நில்
ஆகஸ்ட் சுதந்திர தினம். நமக்கு விடுதலை வாங்கித் தந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களைப் போற்றும் படி பள்ளிக் கூடத்தில் மாறுவேடத்தில் சுதந்திர தியாகிகள் வேடமிட்டு பேச்சுப் போட்டி, கட்டுரை, கவிதை, கோலம், ஓட்டப்பந்தயம், ஓவியம், பாட்டுப் போட்டு என பள்ளிக்கூடம் கலை கட்டியது.
பாரதியார் வேடம் போட்ட பரிதி முதல் பரிசை பெற்றான். ஓவியம், பாட்டு, கவிதை என முதல் பரிசுகளை பெற்றான்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி கொடி ஏற்றி பரிசுகளை வழங்கிய தாளாளர்.
பரிதியின் திறமைக்கு அவர்கள் பெற்றோர்கள் தான் காரணம்.
பரிதியின் தாயார் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.
இது போல் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் போது வீட்டிற்கும் பெருமை, படிக்கும் பள்ளிக் கூடத்திற்கும் பெருமை.
“பீடு பெற நில்” என்று ஔவையாரின் அமுத மொழி போல் பெருமை உண்டாகும் படியான நல்ல வழியில் நடக்க வேண்டும் என பேசி முடித்தார்.
அனைவரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.