7-எண்ணெழுத் திகழேல்

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள்.

மூத்தவன் தந்தையுடன் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

இளையவனை விவசாயப் படிப்பு படிக்க வைத்தனர்.

அவன் விவசாயத்தில் உள்ள சுழற்சி முறை, இயற்கை உரம், அதிக விளைச்சல் எப்படி எடுக்க முடியும் என்ற முறைகளை தன் தந்தையுடனும், அண்ணனுடனும் பகிர்ந்து கொள்வான்.

அவன் சொல்வதை தந்தை ஏற்றுக்கொண்டு செய்ய முன் வந்தாலும், அதை அண்ணன் ஏற்காமல் அவனை பழித்துப் பேசினான்.

நாலு எழுத்து படிச்சிட்டேன் என்று எங்களையே குற்றம் சொல்கிறாயா?என படிப்பையும் குறை சொல்லி ஏற்க மறுத்தான். இப்படிப்பட்ட சம்பவங்களைப் பார்த்த ஔவை பாட்டி “எண்ணெழுத் திகழேல்”  என்று பாடிச் சென்றுள்ளார். 

Share.

Leave A Reply